7வது தமிழ் பருவம் – 3 தேர்வு 100 கேள்விகள்

7th Term -3 Tamil Test

Results

-

#1. கண்ணதாசன் தமிழக __________________ இருந்துள்ளார்?

#2. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் - இதில் பயின்றுள்ள அணி?

#3. திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் எத்தனை பேர்?

#4. திருநெல்வேலி மாவட்ட பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது எது?

#5. “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இப்புருகு சிந்தை இடுதிரியா – நன்புஉருகி” - என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

#6. “ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்கும் என்னும் பொதுவுடமை நெறியை விளக்கியவர் யார்?

#7. எதனை உடையோர் பேறு பெற்றோர் என இயேசு கூறுகிறார்?

#8. சீதக்காதி எனும் பெரிய வாணிகரின் ஊர் எது?

#9. “பொதியி லாயினும் இமய மாயினும் பதியெழு அறியாப் பழங்குடி” என பொதிகை மலையை போற்றியவர்?

#10. வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய என்னும் அடி இடம் பெற்றுள்ள நூல்?.

#11. முக்கூடல் என அழைக்கப்படும் இடம் எது?

#12. காவற்புரை என்பதன் பொருள்?

#13. “ஓதும் பொருளாதாரம் தனிலும் உன்னத அறம் வேண்டும்” என கூறும் நூல்?

#14. பொருள் கூறுக: அந்தம்

#15. “தேன் போன்ற தமிழ்” என்பது எவ்வகையணி?

#16. தமிழர்களின் பண்பாட்டு கூறுகளில் முதன்மையானது எது?

#17. இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுபவை.

#18. தண்பொருநை நதி என அழைக்கபட்டது எது?

#19. அங்கவை, சங்கவை யாருடைய மகளிர்?

#20. ________ என்ற ஒன்றை நம்பிய பிறகு சண்டைகள் நீங்கும்?

#21. ‘மலையளவு’ பிரித்து எழுதுக?

#22. ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவது?

#23. பயணம் எனும் சிறுகதை இடம் பெற்ற நூல்?

#24. “வேர்கள் தொலைவில் இருக்கின்றன” என்ற நூலின் ஆசிரியர் யார்?

#25. பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள _________ என்னும் ஊரில் பிறந்தார்?

#26. “சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர் ஆழி நீங்குகவே என்று” என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

#27. “சாதிகளாலும் பேதங்களாலும் தள்ளாடும் நாடு அது” என குறிப்பிடும் நூல் எது?

#28. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் யார்?

#29. போரின் போது நாட்டுக்காக யாரை அனுப்பவதாக காயிதே மில்லத் கூறினார்?

#30. வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் – பாடியவர் யார்?

#31. நீதிநெறி விளக்கம் பாடியவர்?

#32. “இன்பு+உருகி” சேர்தெழுதுக:

#33. மணி எனும் சொல்லின் பொருள்?

#34. காயிதே மில்லத் எனும் சொல்லின் பொருள் என்ன?

#35. அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்கு _________ என பெயர்.

#36. உலகில் இல்லாத ஒன்றை உவமையாக கூறுவது?

#37. குழி எனும் சொல்லின் பொருள்?

#38. கபடியில் தமிழ்நாடு வென்றது. எவ்வகைப் பெயர்?

#39. வினையால் வினையாக்கிக் _________ நனைகவுள் யானையால் யானையாத் தற்று

#40. மலை அருவி நூலின் ஆசிரியர்?

#41. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர் யார்?

#42. பழமொழி நானூறு எத்தனை பாடல்கள் கொண்டது?

#43. “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவாட்டி” என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல் ?

#44. நாட்டுப்புற பாடலின் வேறு பெயர்?

#45. சீலை எனும் சொல்லின் பொருள்?

#46. _________ உள்ள இடத்தில் உள்ள தீயை அணைக்க தண்ணீர் பயன்படுத்த கூடாது?

#47. பழமொழி நானூறு பெயர்க் காரணம்?

#48. பொய்கையாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள எந்த திருவந்தாதியை பாடினார்?

#49. “அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன ஓர் பைங்கூழ் சிறுகாலைச் செய்” என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்?

#50. 1962 காலத்தில் இந்தியாவின் முதன்மை அமைச்சர் யார்?

#51. முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

#52. “நேற்று வாழ்ந்தவர்கள்” என்ற நூலின் ஆசிரியர்?

#53. “தமிழக அரசியல் வானில் கல்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிர்” எனக் காயிதே மில்லத்தை பாரட்டியவர்?

#54. எப்போது இந்தியா – சீனா இடையேயான போர் நடைபெற்றது?

#55. திருக்குறள் நெறியைப் பரப்புவதை தனது வாழ்க்கை நெறியாக கொண்டவர் யார்?

#56. பசி தீர்க்கும் தொழிலில் முதன்மையானது எது?

#57. “செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்?

#58. கண்ணதாசனின் சிறப்பு பெயர் என்ன?

#59. பழமொழி நானூறு எத்தகைய நூல்களுள் ஒன்று?

#60. சொந்த பயன்பாட்டுக்கு அலுவலக சொத்தை பயன்படுத்த கூடாது என கூறியவர் யார்?

#61. ஜென் என்னும் சொல்லுக்கு என்னவென்று பொருள்?

#62. தாரணி என்பதன் பொருள் என்ன?

#63. பொருள் கூறுக: சுடர் ஆழியான்

#64. வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை என்ன செய்வர்?

#65. “இயேசு காவியம்” எழுதியவர் யார்?

#66. மனித வாழ்க்கைக்கு தேவைப்படுவது என்ன?

#67. உவமை ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும், உவம உருபு மறைந்து வந்தால் என்ன அணி?

#68. மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் யார்?

#69. “பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள் ஒன்றாகு முன்றிலோ இல்” – இதில் ‘ஒன்றாகு முன்றிலோ இல்’ என்பதின் பொருள் என்ன?

#70. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் அடி எந்த நூல்?

#71. “மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு” – இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

#72. இரசிகமணி என சிறப்பிக்க பெற்றவர்?

#73. விடுதலை போராட்டத்தின் போது காயிதே மில்லத் எந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்?

#74. “உலகம் உண்ண உண்: உடுத்த உடுப்பாய்” என்றவர் யார்?

#75. நெல்லிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்?

#76. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என பாளையங்கோட்டை ஊரைக் கூற காரணம்

#77. சும்மாடு எனும் சொல்லின் பொருள்?

#78. தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் எதனை தடவக்கூடாது?

#79. நீருலையில் இதனை பிரித்து எழுதுக?

#80. பொருள் கூறுக: இடர் ஆழி

#81. மடமகள் என்பதன் பொருள்?

#82. பொருள் கூறுக: தகளி

#83. பொது நிகழ்ச்சிக்கு வருகை தர பொது போக்குவரத்தை பயன்படுத்திய தலைவர் யார்?

#84. ________ பண்பு உடையவர்கள் தலைவர்கள் ஆவார்?

#85. ‘நுண் துளி தூங்கும் குற்றாலம்’ என பாடியவர்?

#86. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?

#87. பன்னிரு ஆழ்வார்களுள் முதன்மையானவர்கள் யார்?

#88. மூங்கில்காடு என பொருள் படும் வேணுவனம் என முற்காலத்தில் அழைக்கப்பட்ட ஊர்?

#89. கலைச்சொல் அறிக: Communism

#90. மிகவும் இலக்கிய செறிவு கொண்ட மிகப்பழமையான மொழி என மில்லத் குறிப்பிட்ட மொழி?

#91. திசம்பர் சூடினாள் எவ்வகைப் பெயர்?

#92. மக்கள் அனைவரும் __________ ஒத்த இயல்புடையவர்கள்

#93. ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

#94. “மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்” என கூறியவர் யார்?

#95. அறநெறிச்சாரம் என்பதன் பொருள்?

#96. இலக்கியங்களில் “திரிகூடமலை” என அழைக்கபெறும் மலை.

#97. “இப்படிபட்ட தலைவர் கிடைப்பது அரிது அவர் உத்தமமான மனிதர்” எனக் காயிதே மில்லத்தை பாரட்டியவர்?

#98. ‘தன்னாடு’ பிரித்து எழுதுக?

#99. இயேசுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அறிவுரைகளை கூறும் நூல்?

#100. மனிதன் வாழ்வு எப்போது பாலைவனமாக மாறும்?

Finish

 

 

 

தண்பொருநை நதி என அழைக்கபட்டது எது?

a) காவிரி              b) வைகை                              c) தாமிரபரணி                     d) தென்பெண்ணை

 

________ பண்பு உடையவர்கள் தலைவர்கள் ஆவார்?

a) பொறுமை                 b) காத்தல்                               c) அமைதி                             d) அவகாசம்

 

சீதக்காதி எனும் பெரிய வாணிகரின் ஊர் எது?

a) ஆதிச்சநல்லூர்               b) பாளையங்கோட்டை

c) காயல்பட்டணம்                     d) திருநெல்வேலி

 

தாரணி என்பதன் பொருள் என்ன?

a) உலகம்                            b) பூமி
c) வானம்                                  d) மக்கள்

 

இரசிகமணி என சிறப்பிக்க பெற்றவர்?

a) சுரதா                     b) பாரதிதாசன்

c) திரு. வி. கல்யாண சுந்தரனார்     d) டி.கே.சிதம்பரநாதர்

 

இலக்கியங்களில் “திரிகூடமலை” என அழைக்கபெறும் மலை.

a) குற்றாலமலை                                                                     b) பொதிகை மலை

c) அகத்தியர் மலை                                    d) சதுரகிரி மலை

 

“இயேசு காவியம்” எழுதியவர் யார்?

a) கண்ணதாசன்           b) வைரமுத்து                     c) சுரதா                                       d) பாரதிதாசன்

 

உலகில் இல்லாத ஒன்றை உவமையாக கூறுவது?

a) இல்பொருள் உவமை அணி b) எடுத்துக்காட்டு உவமையணி

c) உவமை அணி d) பிறிதுமொழிதல் அணி

 

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் அடி எந்த நூல்?

a) நாலடியார் b) புறநானூறு                       c) திருக்குறள்                    d) மூதுரை

கண்ணதாசனின் சிறப்பு பெயர் என்ன?

a) கவியரசு                     b) கவியமுது                         c) கவி மன்னன்                d) கவிபேரரசு

 

“நேற்று வாழ்ந்தவர்கள்” என்ற நூலின் ஆசிரியர்?

a) பாரதியார் b) பாவண்ணன்

c) சுப்ரபாரதிமணியன் d) பாரதிதாசன்

 

மனித வாழ்க்கைக்கு தேவைப்படுவது என்ன?

a) பொறுமை                     b) காத்தல்                               c) அமைதி                              d) அவகாசம்

 

திருநெல்வேலி மாவட்ட பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது எது?

a) சர்க்கரை தொழில் b) இரும்பு உற்பத்தி

c) உழவுத்தொழில் d) உப்பு காய்ச்சுதல்

 

________ என்ற ஒன்றை நம்பிய பிறகு சண்டைகள் நீங்கும்?

a) அன்பு b) பண்பு                                     c) ஒழுக்கம்                             d) அறம்

 

மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் யார்?

a) சுவாமி விவேகானந்தர் b) தாயுமானவர்

c) மறைமலை அடிகளார் d) தவத்திரு குன்றக்குடி அடிகளார்

 

மனிதன் வாழ்வு எப்போது பாலைவனமாக மாறும்?

a) சச்சரவுகளில் விழுந்தால் b) ஆசையில் விழுந்தால்

c) மகிழ்ச்சியில் இருந்தால் d) துன்பத்தில் இருந்தால்

 

பொது நிகழ்ச்சிக்கு வருகை தர பொது போக்குவரத்தை பயன்படுத்திய தலைவர் யார்?

a) காந்தியடிகள் b) காமராஜர்                           c) நேரு                                       d) காயிதே மில்லத்

 

திருக்குறள் நெறியைப் பரப்புவதை தனது வாழ்க்கை நெறியாக கொண்டவர் யார்?

a) குன்றக்குடி அடிகளார்                                               b) மருதாசல அடிகளார்

c) தனிநாயகம் அடிகளார் d) பரஞ்சோதி அடிகளார்

 

உவமை ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும், உவம உருபு மறைந்து வந்தால் என்ன அணி?

a) இல்பொருள் உவமை அணி b) எடுத்துக்காட்டு உவமையணி

c) உவமை அணி d) பிறிதுமொழிதல் அணி

 

இயேசுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அறிவுரைகளை கூறும் நூல்?

a) நாககுமார காவியம் b) இயேசு காவியம்

c) கருவாச்சி காவியம் d) யசோதர காவியம்

 

‘நுண் துளி தூங்கும் குற்றாலம்’ என பாடியவர்?

a) திருஞான சம்பந்தர்                                                             b) திருநாவுக்கரசர்

c) சேக்கிழார் d) கண்ணன் கூத்தனார்

 

சொந்த பயன்பாட்டுக்கு அலுவலக சொத்தை பயன்படுத்த கூடாது என கூறியவர் யார்?

a) காந்தியடிகள்                b) காமராஜர்

c) நேரு d) காயிதே மில்லத்

கண்ணதாசன் தமிழக __________________ இருந்துள்ளார்?

a) அரசவைக் கவிஞராக b) அரசவை எழுத்தாளராக

c) அரசவை ஆசிரியராக d) அரசவை பேராசிரியராக

_________ உள்ள இடத்தில் உள்ள தீயை அணைக்க தண்ணீர் பயன்படுத்த கூடாது?

a) எண்ணெய்                     b) துணி                                       c) மண்                                        d) மரம்

 

“மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்” என கூறியவர் யார்?

a) காந்தியடிகள் b) காமராஜர்                           c) நேரு                                       d) காயிதே மில்லத்

 

ஜென் என்னும் சொல்லுக்கு என்னவென்று பொருள்?

a) தியானம் செய்            b) யுத்தம் செய்                    c) தர்மம் செய்                      d) துன்பம் செய்

 

மிகவும் இலக்கிய செறிவு கொண்ட மிகப்பழமையான மொழி என மில்லத் குறிப்பிட்ட மொழி?

a) சமஸ்கிருதம் b) ஆங்கிலம்                        c) ஹிந்தி                                   d) தமிழ்

 

‘தன்னாடு’ பிரித்து எழுதுக?

a) தன் + நாடு b) தன்னா + நாடு          c) தானே+ நாடு                  d) தான்+ நாடு

 

தமிழர்களின் பண்பாட்டு கூறுகளில் முதன்மையானது எது?

a) விருந்தோம்பல் b) தமிழர் கலாச்சாரம்

c) தமிழர் மரபுகள் d) தமிழர் பண்பாடு

 

“மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்

பாரி மடமகள் பாண்மகற்கு” – இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

a) ஆசாரக்கோவை b) ஏலாதி

c) பழமொழி நானூறு                                                               d) இனியவை நாற்பது

 

பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் யார்?

a) பூதஞ்சேந்தனார் b) கபிலர்

c) பெருவாயின் முள்ளியார் d) முன்றுறை அரையனார்

 

அங்கவை, சங்கவை யாருடைய மகளிர்?

a) பாரி                                                                                                b) காரியாசன்

c) விளம்பி நாகனார்                                                             d) கபிலர்

 

மூங்கில்காடு என பொருள் படும் வேணுவனம் என முற்காலத்தில் அழைக்கப்பட்ட ஊர்?

a) திருநெல்வேலி                                                                   b) தேனி

c) இராமநாதபுரம் d) திருச்சி

 

‘மலையளவு’ பிரித்து எழுதுக?

a) மலை+அளவு b) மல+அளவு                     c) மலை+யளவு                  d) மலை+அலவு

 

காவற்புரை என்பதன் பொருள்?

a) சிறைச்சாலை b) பள்ளிச்சாலை              c) கோயில் சாலை          d) பண்டகச் சாலை

 

மடமகள் என்பதன் பொருள்?

a) இளமகள் b) நிலம்                                      c) மழை                                      d) திண்ணை

 

“தேன் போன்ற தமிழ்” என்பது எவ்வகையணி?

a) உருவக அணி b) உவமையணி

c) பின்வருநிலையணி d) இரட்டுறமொழிதல் அணி

 

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக்கல் – இதில் பயின்றுள்ள அணி?

a) இரட்டுறமொழிதல் அணி b) ஏகதேச உருவக அணி

c) எடுத்துக்காட்டு உவமையணி d) வஞ்சப்புகழ்ச்சி அணி

 

“பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்

ஒன்றாகு முன்றிலோ இல்” – இதில் ‘ஒன்றாகு முன்றிலோ இல்’ என்பதின் பொருள் என்ன?

a) ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை b) என்றுமில்லாத வீடு எதுவும்இல்லை

c) ஒன்றுள்ள வீடு ஒன்று இல்லை d) அன்றுமில்லாத வீடு இதுவும் இல்லை

 

எப்போது இந்தியா – சீனா இடையேயான போர் நடைபெற்றது?

a) 1971 b) 1972                            c) 1964                             d) 1962

 

இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுபவை.

திருநெல்வேலியும், பாளையங்கோட்டையும்

திருநெல்வேலியும், தூத்துக்குடியும்

தூத்துக்குடியும், பாளையங்கோட்டையும்

பாளையங்கோட்டையும், மதுரையும்

 

சீலை எனும் சொல்லின் பொருள்?

a) ஆடை b) புடவை                             c) துணி                                                 d) கந்தல்

 

பழமொழி நானூறு எத்தகைய நூல்களுள் ஒன்று?

a) பதினெண்கீழ்க்கணக்கு                                            b) பதினெண்மேற்கணக்கு

c) சிற்றிலக்கியம் d) காப்பியம்

 

பழமொழி நானூறு எத்தனை பாடல்கள் கொண்டது?

a) 401 b) 402                               c) 400                               d) 406

 

பழமொழி நானூறு பெயர்க் காரணம்?

a) ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு விடுகதை இடம்பெறுவதால்

b) ஒவ்வொரு பாடல் முதலிலும் ஒரு பழமொழி இடம்பெறுவதால்

c) ஒவ்வொரு பாடல் இடையில் ஒரு பழமொழி இடம் பெறுவதால்

d) ஒவ்வொரு பாடல் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெறுவதால்

 

தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என பாளையங்கோட்டை ஊரைக் கூற காரணம்.

a) அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால்

b) அதிக அளவில் சுற்றுலா தளங்கள் இருப்பதால்

c) அதிக அளவில் மக்கள் இருப்பதால்

d) அதிக அளவில் சுற்றுப்புறத் தூய்மை இருப்பதால்

 

நீருலையில் இதனை பிரித்து எழுதுக?

a) நீரு + இலையில் b) நீரு + உலையில்

c) நீர் + உலையில் d) நீர் + இலையில்

 

நெல்லிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்?

a) தஞ்சாவூர் b) திருச்சி                                c) கள்ளக்குறிச்சி            d) நெல்லை

 

மலை அருவி நூலின் ஆசிரியர்?

a) கி. வா. ஜகந்நாதன் b) பாரதியார்

c) கண்ணதாசன் d) சுரதா

 

 

பசி தீர்க்கும் தொழிலில் முதன்மையானது எது?

a) நீர் பாய்ச்சுதல் b) நாற்று நடுதல்

c) அறுவடை செய்தல் d) உழவுத்தொழில்

 

குழி எனும் சொல்லின் பொருள்?

a) நில அளவைப்பெயர் b) நிலத்தை தெரிவு செய்தல்

c) நிலத்தை பிரித்தல் d) நிலத்தில் நடுதல்

 

போரின் போது நாட்டுக்காக யாரை அனுப்பவதாக காயிதே மில்லத் கூறினார்?

a) மகனை                     b) சகோதரனை                c) மகளை                                d) சகோதரியை

 

மணி எனும் சொல்லின் பொருள்?

a) முற்றிய காய் b) கனிந்த கனி                   c) முற்றிய நெல்              d) பச்சைப் பயிர்

 

சும்மாடு எனும் சொல்லின் பொருள்?

பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்

வயிற்றில் கட்டும் துணி

கன்னத்தை கட்டும் துணி

காலைக் கட்டும் துணிச்சுருள்

 

முக்கூடல் என அழைக்கப்படும் இடம் எது?

a) சீவலப்பேரி                                                                                 b) திருநெல்வேலி

c) பாளையங்கோட்டை d) மதுரை

 

கலைச்சொல் அறிக: Communism

a) தனியுடைமை b) இறையுடைமை

c) பொதுவுடைமை                                                             d) மதச்சார்பின்மை

 

1962 காலத்தில் இந்தியாவின் முதன்மை அமைச்சர் யார்?

a) ஜவகர்லால் நேரு                                                             b) இந்திரா காந்தி

c) வாஜ்பாய் d) வி. பி. சிங்

 

அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்கு _________ என பெயர்.

a) நாற்று நடுதல் b) நாற்று வீதம்                    c) மீட்டல்                                  d) போரடித்தல்

 

நாட்டுப்புற பாடலின் வேறு பெயர்?

a) புதுக்கவிதை b) நாடோடி பாடல்கள்

c) வாய்மொழி இலக்கியம்                                                 d) தமிழர் பாடல்கள்

 

அறநெறிச்சாரம் என்பதன் பொருள்?

நல்லொழுக்கங்கள் பற்றி விவரிக்கும் நூல்

வாழ்வியல் பற்றி விளக்கிக் கூறும் நூல்

அறநெறிகளைத் தொகுத்து கூறும் நூல்

ஆழ்வார்கள் பற்றி கூறும் நூல்

 

வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை என்ன செய்வர்?

a) நடவு b) களை                                    c) மருந்தடித்தல்               d) அறுவடை

 

பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ________ என்னும் ஊரில் பிறந்தார்?

a) மாமல்லபுரம் b) திருவெஃகா              c) மயிலாப்பூர்                       d) திருநகரி

 

ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவது?

a) மோனை b) எதுகை                               c) முரண்                                   d) அந்தாதி

 

காயிதே மில்லத் எனும் சொல்லின் பொருள் என்ன?

a) சீர்திருத்த வழிகாட்டி b) மொழி வழிகாட்டி

c) சமுதாய வழிகாட்டி                                                             d) சமூக வழிகாட்டி

 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய என்னும் அடி இடம் பெற்றுள்ள நூல்?

a) பெரிய திருமொழி b) திருக்குறுந்தாண்டகம்

c) பெரியபுராணம் d) நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

 

வினையால் வினையாக்கிக் _________ நனைகவுள்

யானையால் யானையாத் தற்று

a) கோடல்                              b) கூடல்                                   c) மூடல்                                     d) சாடல்

 

பொருள் கூறுக: சுடர் ஆழியான்

ஒளிவிடும் சக்கரத்தை உடைய சிவன்

ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால

கடலில் படுத்துறங்கும் திருமால்

ஒளிவிடும் சக்கரத்தை உடைய பிரமன்

 

பொருள் கூறுக: இடர் ஆழி

a) இன்பக் கடல் b) பெரிய கடல்                    c) துன்பக்கடல்                   d) ஆழமான கடல்

 

“செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்?

a) திருக்குறள் b) அகநானூறு                    c) நாலடியார்                         d) புறநானூறு

 

ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

a) ஐந்து b) மூன்று                                 c) ஏழு                                          d) ஆறு

 

“சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர் ஆழி நீங்குகவே என்று” என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

a) பெரியபுராணம் b) நாலாயிர திவ்யப்பிரபந்தம்

c) திருத்தொண்டர் புராணம் d) திருமந்திரம்

 

நீதிநெறி விளக்கம் பாடியவர்?

a) குமரகுருபரர்                                                                            b) திரிகூடராசப்ப கவிராயர்

c) பூதத்தாழ்வார் d) பேயாழ்வார்

 

விடுதலை போராட்டத்தின் போது காயிதே மில்லத் எந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்?

a) உப்பு சத்தியாகிரக போராட்டம் b) ஜாலியன் வாலாபாக் போராட்டம்

c) ஒத்துழையாமை இயக்கம்                                          d) வெள்ளையனே வெளியேறு இயக்கம்

 

பொருள் கூறுக: தகளி

a) நெய் விளக்கு                b) அகல் விளக்கு

c) வெப்பம் d) கடல் அலை

“வேர்கள் தொலைவில் இருக்கின்றன” என்ற நூலின் ஆசிரியர் யார்?

a) பாரதியார் b) பாவண்ணன்

c) சுப்ரபாரதிமணியன் d) பாரதிதாசன்

 

நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர் யார்?

a) பொய்கை ஆழ்வார் b) நம்மாழ்வார்

c) பூதத்தாழ்வார்                                                             d) பேயாழ்வார்

 

பயணம் எனும் சிறுகதை இடம் பெற்ற நூல்?

a) சஞ்சாரம் b) துயில்                                    c) பிரயாணம்                       d) உலகம்

 

மக்கள் அனைவரும் __________ ஒத்த இயல்புடையவர்கள்

a) பிறப்பால்                     b) நிறத்தால்                          c) குணத்தால்                      d) பணத்தால்

 

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இப்புருகு சிந்தை இடுதிரியா – நன்புஉருகி”

–    என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

a) நாலாயிர திவ்வியப்பிரபந்தம் b) பெரியபுராணம்

c) திருத்தொண்டர் புராணம் d) அகநானூறு

 

“இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக

வன்சொல் களைகட்டு வாய்மை எருவாட்டி” என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்?

a) அறநெறிச்சாரம் b) திருமந்திரம்

c) பெரியபுராணம் d) திருவந்தாதி

 

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் எதனை தடவக்கூடாது?

a) தண்ணீர் b) வெண்ணெய்             c) சுண்ணாம்பு                     d) பேனா மை

 

“இப்படிபட்ட தலைவர் கிடைப்பது அரிது அவர் உத்தமமான மனிதர்” எனக் காயிதே மில்லத்தை பாரட்டியவர்?

a) பெரியார்                                                                                 b) காமராஜர்

c) அறிஞர் அண்ணா d) கருணாநிதி

 

பொய்கையாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள எந்த திருவந்தாதியை பாடினார்?

a) முதல் திருவந்தாதி b) இரண்டாம் திருவந்தாதி

c) மூன்றாம் திருவந்தாதி d) நான்காம் திருவந்தாதி

 

பொருள் கூறுக: அந்தம்

a) முதல் b) இடை                                    c) முடிவு                               d) அசை

 

கபடியில் தமிழ்நாடு வென்றது. எவ்வகைப் பெயர்?

a) பொருளாகு பெயர் b) இடவாகுபெயர்

c) முதலாகு பெயர் d) காலவாகு பெயர்

 

“அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன ஓர்

பைங்கூழ் சிறுகாலைச் செய்” என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்?

a) சிறுபஞ்சமூலம் b) நான்மணிக்கடிகை

c) ஆசாரக்கோவை d) அறநெறிச்சாரம்

 

திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் எத்தனை பேர்?

a) பத்து ஆழ்வார்கள்                b) ஆறு ஆழ்வார்கள்

c) நான்கு ஆழ்வார்கள்                d) பன்னிரெண்டு ஆழ்வார்கள்

 

நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?

a) நாதமுனி                                                                                    b) வேதவியாசர்

c) மாணிக்கவாசகர் d) பொய்கை ஆழ்வார்

 

முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

a) திருமுனைப்பாடி                                                             b) திருமழிசை

c) மாமல்லபுரம் d) திருஆவினன்குடி

 

“தமிழக அரசியல் வானில் கல்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிர்” எனக் காயிதே மில்லத்தை பாரட்டியவர்?

a) பெரியார் b) காமராஜர்

c) அறிஞர் அண்ணா                d) கருணாநிதி

 

திசம்பர் சூடினாள் எவ்வகைப் பெயர்?

a) பொருளாகு பெயர்                                                               b) இடவாகுபெயர்

c) முதலாகு பெயர் d) காலவாகு பெயர்

 

“இன்பு + உருகி” சேர்தெழுதுக:

a) இன்புருகி                      b) இன்புருகு                        c) இன்பருகி                         d) இன்பம் உருகி

 

“உலகம் உண்ண உண்: உடுத்த உடுப்பாய்” என்றவர் யார்?

a) பாரதியார்                                                                                        b) தாயுமானவர்

c) தேசிக விநாயகம் பிள்ளை                                                          d) பாவேந்தர் பாரதிதாசன்

 

பன்னிரு ஆழ்வார்களுள் முதன்மையானவர்கள் யார்?

பேயாழ்வார், நம்மாழ்வார், பூதத்தாழ்வார்

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார்

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்

நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்

 

“சாதிகளாலும் பேதங்களாலும் தள்ளாடும் நாடு அது” என குறிப்பிடும் நூல் எது?

a) நாககுமார காவியம் b) இயேசு காவியம்

c) கருவாச்சி காவியம் d) யசோதர காவியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button