6th Tamil Term – 1 Questions

1. நல்ல புகழ்மிக்க புலவர்களுக்கு தமிழ் எதைப் போன்றது?
a) இளமையான பால்
b) துணைகொடுக்கும் தோள்
c) கூர்மையான வேல்
d) எல்லையாகிய வான்

Answer:

c

2. எதில் “அணுகு” என்று நெல்லை சு.முத்து கூறுகிறார்?
a) அறிவியல்
b) ஐயம்
c) ஊக்கம்
d) ஈடுபாடு

Answer:

d

3. “தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்” – பாடியவர் _________
a) பாவேந்தர்
b) காசி ஆனந்தன்
c) பெருஞ்சித்திரனார்
d) விடுதலைக்கவி

Answer:

b

4. புரட்சிக்கவியின் பாடலில் காணப்படும் புரட்சிக்கர கருத்துகள் _________
a) விடுதலை, வறுமை ஒழிப்பு, சமூக சீர்திருத்தம்
b) பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு
c) கல்வி, மக்களாட்சி, ஜாதி ஒழிப்பு
d) இவை அனைத்தும்

Answer:

b

5. “ஊழி பலநூறு கண்டதுவாம், அறிவு ஊற்றெனும் நூல் பல கொண்டதுவாம்” என்ற அடிகள் பாடியவர் _________
a) புரட்சிக்கவி
b) பெருஞ்சித்திரனார்
c) மகாகவி
d) கவிஞர் காசி ஆனந்தன்

Answer:

b

6. பொருள் தருக: உள்ளப்பூட்டு
a) உள்ளத்தின் அறியாமை
b) உள்ளே சென்று பூட்டு
c) மனதை பூட்டு
d) உள்ளத்தின் தெளிவு

Answer:

a

7. பெருஞ்சித்திரனாரின் சிறப்பு பெயர்கள் _________.
a) உவமைக்கவி
b) பகுத்தறிவுகவிராயர்
c) விடுதலைகவி
d) பாவலரேறு

Answer:

d

8. “என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” – என்று தமிழின் தொன்மையை கூறியவர்
a) பாரதிதாசன்
b) பாரதியார்
c) நாமக்கல்
d) கவிஞர் பெருஞ்சித்திரனார்

Answer:

b

9. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் _________ எழுத்துக்களாகவே உள்ளது
a) இடஞ்சுழி
b) வலஞ்சுழி
c) நெட்டெழுத்து
d) குற்றழுத்து

Answer:

b

10. “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” – அடிகள் இடம்பெற்ற நூல் _________
a) அகத்தியம்
b) புறநானுறு
c) அகநானுறு
d) தொல்காப்பியம்

Answer:

d

11. “தமிழன் கண்டாய்” – என்ற வரலாற்றுச் சிற்பி எழுத்தாளர் யார்?
a) இளங்கோவடிகள்
b) திருஞானசம்பந்தர்
c) சுந்தரர்
d) திருநாவுக்கரசர்

Answer:

d

12. பாகற்காய் பிரித்து எழுதுக _________.
a) பாக்கு+இல்+காய்
b) பாகு+அல்+காய்
c) பாகற் +காய்
d) பாகு+ஆற்காய்

Answer:

b

13. பூவின் ஏழு நிலைகள் _________.
a) அரும்பு, முகை, மொட்டு, மலர், அலர், வீ, செம்மல்
b) அரும்பு, மொட்டு, முகை, அலர், மலர், வீ, செம்மல்
c) அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
d) அரும்பு, மொட்டு, மலர், அலர், வீ, முகை,செம்மல்

Answer:

c

14. ‘மா’ எனும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் _________.
a) மரம், விலங்கு, அழகு
b) நோய், துன்பம், கடல்
c) தலைவன், மன்னன், சிங்கம்
d) உயர்வு, மதில், ஓடம்

Answer:

a

15. முத்தமிழில் உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்துவது _________.
a) இயல்தமிழ்
b) நாடகத்தமிழ்
c) பைந்தமிழ்
d) இசைத்தமிழ்

Answer:

b

16. சப்பாத்திக் கள்ளி, தாழை என்பதன் இலைப்பெயர் _________.
a) மடல்
b) கூந்தல்
c) தட்டை
d) தாள்

Answer:

a

17. _________ எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
a) மெய்
b) ஆயுதம்
c) உயிர்மெய்
d) உயிர்

Answer:

b

18. “சீரிளமை” என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் _________.
a) சிரி+இளமை
b) சீர்+இளமை
c) சீர்+ரிளமை
d) சீ+ரிளமை

Answer:

b

19. மொழியை கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது _________ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
a) எழுத்து
b) குரல்
c) இணையம்
d) எண்

Answer:

d

20. “கனிச்சாறு” என்னும் நூலில் இடம் பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை _________.
a) 8 தொகுதிகள்
b) 18 தொகுதிகள்
c) 12 தொகுதிகள்
d) 10 தொகுதிகள்

Answer:

a

 

21) “திரவப்பொருளை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது” என்ற கருத்தை கூறியவர்?
a) தொல்காப்பியர்
b) ஔவையார்
c) அகத்தியர்
d) திருவள்ளுவர்

Answer:

b

22)போர்களத்தில் புண்பட்ட வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல்?
a) பெருங்கதை
b) நற்றிணை
c) பட்டினப்பாலை
d) பதிற்றுப்பத்து

Answer:

d

23)“கோட்சசுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிகதிர் பரதவர்” – இவ்வரிகள் இடப்பெற்ற நூல்? (அறுவை மருத்துவம் பற்றி)
a) அகநானுறு
b) புறநானுறு
c) கலித்தொகை
d) நற்றிணை

Answer:

d

24)“தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” வரிகளை பாடியவர்?
a) இடைக்காடனார்
b) கபிலர்
c) ஔவையார்
d) அகத்தியர்

Answer:

b

25)வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளை குவித்தல் ஆகிய செயல்பாடுகளால் பிறக்கும் எழுத்துக்கள் _________.
a) மெய் எழுத்துகள்
b) உயிர்மெய் எழுத்துகள்
c) அஃகேணம்
d) உயிர் எழுத்துகள்

Answer:

d

26) அருகு, கோரை என்பதன் இலைப் பெயர்கள் _________.
a) புல்
b) தாள்
c) மடல்
d) தோகை

Answer:

a

27)வேளாண்மை என்னும் சொல் இடபெற்ற நூல் _________.
a) கலித்தொகை, திருக்குறள்
b) அகநானூறு, புறநானூறு
c) குறுந்தொகை, கலித்தொகை
d) பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை

Answer:

a

28)உலகம் என்னும் சொல் இடபெற்ற நூல் _________.
a) பெரும்பாணாற்றுப்படை
b) அகநானூறு
c) கலித்தொகை
d) திருமுருகாற்றுப்படை

Answer:

d

29.உலக உயிர்களை “ஓரறிவு முதல் ஆறறிவு வரை” வகைப்படுத்தியவர்?
a) ஒளவையர்
b) தொல்காப்பியர்
c) அகத்தியர்
d) திருவள்ளுவர்

Answer:

b

30. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற அறிவியல் கருத்து கூறிய தமிழறிஞர் _________.

a) இடைக்காடனார்
b) கபிலர்
c) ஔவையார்
d) அகத்தியர்

Answer:

b

31.குறில் எழுத்து, நெடில் எழுத்து ஒலிக்கும் கால அளவு _________.
a) அரை, 1
b) கால், அரை
c) கால், 1
d) 1, 2

Answer:

d

32.மெய் என்பது _________எனப் பொருள்படும்.
a) உயிர்
b) ஆத்மா
c) உண்மை
d) உடம்பு

Answer:

d

33.உலகம், உயிர், ஒழி, ஊர், அன்பு, உயிர், மகிழ்ச்சி, புகழ், செல், முடி இவ்வெழுத்துகள் இடம்பெறும் நூல்_________.
a) அகநானூறு
b) கலித்தொகை
c) குறுந்தொகை
d) தொல்காப்பியம்

Answer:

d

34.“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்” என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் _________.
a) திருக்குறள்
b) சீவக சிந்தாமணி
c) சிலப்பதிகாரம்
d) மணிமேகலை

Answer:

c

35.பொருள் கூறுக _________ “கொங்கு”.
a) நிலவு
b) மகரந்தம்
c) ஊர்
d) பூ

Answer:

b

36.தேசிய அறிவியல் நாள்?
a) பிப்ரவரி 16
b) பிப்ரவரி 18
c) பிப்ரவரி 28
d) பிப்ரவரி 22

Answer:

c

37.பிரித்து எழுதுக – “நிலத்தினிடையே”
a) நிலத்தின்+இடையே
b) நிலத்தி+னிடையே
c) நில+தினிடையே
d) நிலம்+இடையே

Answer:

a

38.பொருத்துக:
முத்துச்சுடர் போல – (a) மாடங்கள்
தூய நிறத்தில் – (b) தென்றல்
சித்தம் மகிழ்ந்திட – (c) நிலா ஒளி
a) 1-C, 2-A, 3-B
b) 1-C, 2-B, 3-A
c) 1-B, 2-A, 3-C
d) 1-A, 2-B, 3-C

Answer:

a

39.எவற்றை அடிப்படையாக கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன?
a) உணவு, கடல், திறன்
b) நிலவு, விண்மீன், புவிஈர்ப்பு புலம்
c) சூரியன், ஆறுகள், சக பறவைகள்
d) காடுகள், விலங்குகள், மீன்கள்

Answer:

b

40.வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்களில்
பொருந்திய ஒன்றை சுட்டுக:
a) தலையில் சிறகு வளர்தல்
b) கண்கள் சிகப்பாக மாறுதல்
c) கால்களின் நிறம் மாறுதல்
d) மேற்கூறிய அனைத்தும்

Answer:

a

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button