6th Tamil இயல் 2 வினா விடைகள்

ஆறாம் வகுப்பு – இயல் 2

Answer key below

1. ” திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் என்ற பாடலின் ஆசிரியர் யார்?

2. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக அமைந்த நூல் எது?

3. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

4. தேன் நிறைந்த ஆத்தி மலர் மாலையை அணிந்த மன்னன் யார்?

5. காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்த மன்னன் யார்?

6. இளங்கோவடிகளின் காலம் ___?

7. சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் யாவை?

8. கழுத்தில் சூடுவது என்ன?

9. கதிரவனின் மற்றொரு பெயர் என்ன?

10. திங்கள் என்பதன் பொருள் என்ன?

11. திகிரி என்பதன் பொருள் என்ன?

12. கொங்கு என்பதன் பொருள் என்ன?

13. அலர் என்பதன் பொருள் என்ன?

14. பொற்கோட்டு என்பதன் பொருள் என்ன?

15. மேரு என்பதன் பொருள் என்ன?

16. நாமநீர் என்பதன் பொருள் என்ன?

17. அளி என்பதன் பொருள் என்ன?

18. ” காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் – என்ற பாடலின் ஆசிரியர் யார்?

19. ” காணி நிலம் வேண்டும் பராசக்திஎன்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?

20. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் யார்?

21. பாரதியாருக்கு பாரதி என்னும் பட்டம் வழங்கியவர் யார்?

22. காணி என்ற சொல் எதனைக் குறிக்கிறது?

23. கேணி என்பதன் பொருள் என்ன?

24. மாடங்கள் என்பதன் பொருள் என்ன?

25. தன் கவிதைகள் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர் யார்?

26. பாரதியார் இயற்றிய நூல்கள் யாவை?

27. சித்தம் என்பதன் பொருள் என்ன?

28. பொருத்துக.

முத்துச்சுடர்                                 மாடங்கள்

தூயநிறத்தில்                            தென்றல்

சித்தம் மகிழ்ந்திட                     நிலாஒளி

29. பறவைகள் இடம் பெயர்தலை எப்படி குறிப்பிடுகின்றன?

30. பறவைகள் எதன் காரணமாக இடம் பெயர்கின்றன?

31. பறவைகள் எதனை அடிப்படையாக கொண்டு இடம் பெயர்கின்றன?

32. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை எது?

33. கப்பல் பறவை தரையிறங்காமல் எத்தனை கிலோ மீட்டர் வரை பறக்கும்?

34. கப்பல் பறவையின் வேறு பெயர்கள் யாவை?

35. ” நாராய் நாராய் செங்கால் நாராய் என்ற பாடலின் ஆசிரியர் யார்?

36. ” தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர ஆயின்” என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?

37. உலகச் சிட்டுக்குருவிகள் தினம் ____?

38. சிட்டுக்குருவிகள் வாழ முடியாத பகுதி எது?

39. இமயமலைத் தொடரில் எத்தனை  மீட்டர் உயரத்தில் சிட்டுக்குருவிகள் வாழ்கின்றன?

40. சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் எத்தனை ஆண்டுகள்?

41. இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?

42. சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற பெயரில் தன் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர் யார்?

43. ” காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியவர் யார்?

44. பறவை பற்றிய படிப்பு ____?

45. உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம் எது?

46. ” மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்!

பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது! ” என்று கூறியவர் யார்?

47. தமிழகத்திற்கு வலசை வந்த செங்கால் நாரைகள் பற்றிப் பாடிய சங்ககாலப் புலவர் யார்?

48. சிட்டுக்குருவி முட்டைகளை எத்தனை நாட்கள் அடைகாக்கும்?

49. ஆர்டிக் ஆலா பயணம் செய்யும் தொலைவு ___?

50. புள் என்பதன் பொருள் என்ன?

51. ” கிழவனும் கடலும் ” என்ற ஆங்கிலப் புதினத்தின் ஆசிரியர் யார்?

52.  ” கிழவனும் கடலும் ” என்ற ஆங்கிலப் புதினம் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது?

53. முதல் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

54. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?

55. நுட்பமான ஒலிப்பு முறையை உடைய எழுத்து எது?

 

விடைகள் :

1. இளங்கோவடிகள்

2. சிலப்பதிகாரம்

3. இளங்கோவடிகள்

4. சோழ மன்னன்

5. சோழ மன்னன்

6. கி. பி. இரண்டாம் நூற்றாண்டு

7. முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம்

8. தார்

9. ஞாயிறு

10. நிலவு

11. ஆணைச்சக்கரம்

12. மகரந்தம்

13. மலர்தல்

14. பொன்மயமான சிகரத்தில்

15. இமயமலை

16. அச்சம் தரும் கடல்

17. கருணை

18. பாரதியார்

19. பாரதியார் கவிதைகள்

20. பாரதியார்

21. எட்டயபுர மன்னன்

22. நில அளவு

23. கிணறு

24. மாளிகையின் அடுக்குகள்

25. பாரதியார்

26. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு

27. உள்ளம்

28. பொருத்துக.

முத்துச்சுடர்                                 நிலாஒளி

தூயநிறத்தில்                            மாடங்கள்

சித்தம் மகிழ்ந்திட                     தென்றல்

29. வலசை போதல்

30. உணவு, இருப்பிடம், தட்பவெப்ப நிலை மாற்றம், இனப்பெருக்கம்

31. நிலவு, விண்மீன், புவியீர்ப்புப்புலம்

32. கப்பல் பறவை

33. 400 கிலோ மீட்டர்

34. கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப்பறவை

35. சத்திமுத்தப்புலவர்

36. சத்திமுத்தப்புலவர்

37. மார்ச் 20

38. துருவப்பகுதி

39. 4000 மீட்டர்

40. 10 முதல் 13 ஆண்டுகள்

41. டாக்டர் சலீம் அலி

42. டாக்டர் சலீம் அலி

43. பாரதியார்

44. ஆர்னித்தாலஜி                       

45. ஆர்டிக் ஆலா

46. டாக்டர் சலீம் அலி

47. சத்திமுத்தப்புலவர்

48. 14 நாட்கள்

49. 22000 கிலோ மீட்டர்

50. பறவை

51. எர்னஸ்ட் ஹெமிங்வே

52. 1954

53.  30 எழுத்துக்கள்

54. 10 வகைப்படும்

55. ஆய்த எழுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button