6th Tamil Term – 1 Oneliner (New and old book)

6ஆம் வகுப்பு பருவம் – 01 ஒருவரி பாடம் (புதிய மற்றும் பழைய புத்தகம்)

இயல் – I

இன்பத்தமிழ்‌

  1. தமிழுக்கு மணமென்று பேர்‌ இன்பத்‌ தமிழ்‌ எங்கள்‌ வாழ்வுக்கு நிருமித்த ஊர்‌ – பாரதிதாசன்‌
  2. நல்ல புகழ்மிக்க புலவர்களுக்கு தமிழ்‌ கூர்மையான வேல்‌ போன்றது- பாரதிதாசன்
  3. தமிழ்‌ எங்கள்‌ அறிவுக்குத்தோள்‌, இன்பத்‌ தமிழ்‌ எங்கள்‌ கவிதைக்கு வயிரத்தின்‌ வாள்‌” பாரதிதாசன்‌
  4. நிருமித்த என்பதன்‌ பொருள்‌ – உருவாக்கிய
  5. “தமிழே உயிரே வணக்கம்‌, தாய்பிள்ளை உறவம்மா, உனக்கும்‌ எனக்கும்‌” எனப்‌ பாடியவர்‌ – கவிஞர்‌ காசி ஆனந்தன்‌
  6. “தமிழே உன்னை நினைக்கும்‌ தமிழன்‌ என்‌ நெஞ்சம்‌ இனிக்கும்‌ இனிக்கும்‌” என்று பாடியவர்‌ – கவிஞர்‌ காசி ஆனந்தன்‌
  7.  ‘இன்பத்தமிழ்‌’ பாடல்‌ மூலம்‌ தமிழை அமுது, மணம்‌ என பெயரிட்டு அழைத்தவர்‌ – புரட்சிக்கவி பாரதிதாசன்‌
  8. பாரதிதாசனின்‌ காலம்‌ – (1891-1964)
  9. பாரதிதாசனின்‌ சிறப்பு பெயர்கள்‌ – பாவேந்தர்‌, புரட்சிக்கவி, புதுவைக்குயில்‌
  10. புரட்சிக்கவியின்‌ பாடலில்‌ காணப்படும்‌ புரட்சிகர கருத்துகள்‌ – பெண்‌ கல்வி, கைம்பெண்‌ மறுமணம்‌, பொதுவுடைமை, பகுத்தறிவு
  11. தமிழ்‌ + எங்கள்‌ என்பதை சேர்த்து எழுதுக – தமிழெங்கள்‌

தமிழ்க்கும்மி

  1. “ஊழி பலநூறு கண்டதுவாம்‌, அறிவு ஊற்றெனும்‌ நூல்பல கொண்டதுவாம்‌ என்ற பாடல்‌ அடிகளை பாடியவர்‌ – பெருஞ்சித்திரனார்‌
  2. பொருள்‌ தருக: ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
  3. பொருள்‌ தருக: உள்ளப்பூட்டு – உள்ளத்தின்‌ அறியாமை
  4. மேதினி என்பதன்‌ பொருள்‌ – உலகம்‌
  5. பெருஞ்சித்திரனாரின்‌ இயற்பெயர்‌ – மாணிக்கம்‌
  6. பெருஞ்சித்திரனாரின்‌ சிறப்புப்‌ பெயர்‌ – பாவலரேறு
  7. பெருஞ்சித்திரனாரின்‌ நூல்கள்‌ – கனிச்சாறு, கொய்யாக்கனி, ஐயை, பாவியக்கொத்து, நூறாசிரியம்‌
  8. பெருஞ்சித்திரனாரின்‌ இதழ்கள்‌ – தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்‌
  9. “கனிச்சாறு” என்னும்‌ நூலில்‌ இடம்பெற்றுள்ள தொகுதிகளின்‌ எண்ணிக்கை – 8 தொகுதிகள்
  10. செந்தமிழின்‌ புகழ்‌ எட்டுத்திசைகளிலும்‌ பரவ வேண்டும்‌ என்று எண்ணியவர்‌-பெருஞ்சித்திரனார்‌

வளர்தமிழ்‌

  1. உலகில்‌ உள்ள மொழிகளின்‌ எண்ணிக்கை – ஆறாயிரத்திற்கும்‌ மேற்பட்டவை
  2. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்‌ இனிதாவது எங்கும்‌ காணோம்‌ என்று தமிழை வியந்து பாடியவர்‌ – பாரதியார்
  3. “என்று பிறந்தவள்‌ என்று உணராத இயல்பினளாம்‌ எங்கள்‌ தாய்‌ என்று தமிழின்‌ தொன்மையை கூறியவர்‌ – பாரதியார்‌
  4. தமிழில்‌ நமக்கு கிடைத்துள்ள மிகப்‌ பழைமையான நூல்‌ – தொல்காப்பியம்‌ 
  5. தமிழ்‌ எழுத்துகள்‌ பெரும்பாலும்‌ வலஞ்சுழி எழுத்துக்களாகவே உள்ளன.
  6. வலஞ்சுழி எழுத்துகள்‌ (எடுத்துக்காட்டு) – அ, எ, ண, ஞ, ஒள
  7. இடஞ்சுழி எழுத்துகள்‌ (எடுத்துக்காட்டு) –ட, ய, ழ
  8. “தமிழென்‌ கிளவியும்‌ அதனோ ரற்றே என்ற அடிகள்‌ இடம்பெற்ற நூல்‌ – தொல்காப்பியம்‌
  9. “தமிழ்‌ என்னும்‌ சொல்‌ முதலில்‌ ஆளப்படும்‌ இலக்கியம்‌ –தொல்காப்பியம்‌
  10. “தமிழன்‌ கண்டாய்‌” என்ற வரி மூலம்‌ “தமிழன்‌ என்ற வார்த்தையை முதலில்‌ பயன்படுத்திய புலவர்‌ – திருநாவுக்கரசர்‌ (நூல்‌ – அப்பர்‌ தேவாரம்‌)                                           
  11. “தமிழ்நாடு” என்னும்‌ சொல்‌ முதில்‌ இடம்பெற்றுள்ள இலக்கியம்‌ – சிலப்பதிகாரம்‌ (வஞ்சிக்காண்டம்‌)
  12. சீர்மை என்பது ஒழுங்கு முறையைக்‌ குறிக்கும்‌ சொல்‌.
  13. “இமிழ்கடல்‌ வேலியைத்‌ தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்‌. இவ்வரிகள்‌ இடம்பெற்ற நூல்‌ – சிலப்பதிகாரம்
  14. அஃறிணை என்பதன்‌ பொருள்‌ – உயர்வு அல்லாத திணை
  15. பிரித்து எழுதுக: அஃறிணை = அல்‌ + திணை
  16. பிரித்து எழுதுக: பாகற்காய்‌ பாகு அல்‌ + காய்‌
  17. பாகற்காய்‌ என்பதன்‌ பொருள்‌ – இனிப்பு அல்லாத காய்‌
  18. உலக மொழிகளில்‌ இலக்கண, இலக்கிய வளம்‌ பெற்றுத்‌ திகழும்‌ மொழிகளுள்‌ செம்மை மிக்க மொழி – தமிழ்‌ மொழி
  19. பூ தோன்றுவது முதல்‌ உதிர்வது வரை உள்ள நிலைகளின்‌ எண்ணிக்கை – 7 நிலைகள்‌
  20. பூவின்‌ ஏழு நிலைகள்‌ – அரும்பு, மொட்டு, முகை, மலர்‌, அலர்‌, வீ, செம்மல்‌ 
  21. “மா’ எனும்‌ ஓரெழுத்து ஒரு மொழியின்‌ பொருள்‌ – மரம்‌, விலங்கு, அழகு, பெரிய, திருமகள்‌, அறிவு, அளவு, அழைத்தல்‌, துகள்‌, மேன்மை, வயல்‌, வண்டு
  22. தமிழின்‌ கவிதை வடிவங்கள்‌ – துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்‌  
  23. தமிழின்‌ உரைநடை வடிவங்கள்‌ – கட்டுரை, புதினம்‌, சிறுகதை
  24. முத்தமிழில்‌ எண்ணத்தை வெளிப்படுத்துவது – இயல்தமிழ்‌
  25. முத்தமிழில்‌ உள்ளத்தை மகிழ்விப்பது – இசைத்தமிழ்‌ 
  26. முத்தமிழில்‌ உணர்வில்‌ கலந்து வாழ்வை நல்வழிப்படுத்துவது – நாடகத்தமிழ்‌
  27. நெல்‌, வரகு என்பதன்‌ இலைப்பெயர்‌ – தாள்‌
  28. மல்லி’ என்ற தாவரத்தின்‌ இலைப்பெயர்‌ – தழை
  29. சப்பாத்திக்‌ கள்ளி, தாழை என்பதன்‌ இலைப்பெயர்‌ – மடல்‌
  30. கரும்பு, நாணல்‌ என்பதன்‌ இலைப்பெயர்‌ – தோகை
  31. கமுகு (பாக்கு) என்பதன்‌ இலைப்பெயர்‌ – கூந்தல்‌
  32. “Whatsapp” என்பதன்‌ தமிழாக்கம்‌ – புலனம்‌
  33. “சீரிளமை’ என்ற சொல்லைப்‌ பிரிக்கக்‌ கிடைக்கும்‌ சொல்‌ – சீர்மை இளமை
  34. மொழியை கணினியில்‌ பயன்படுத்த வேண்டும்‌ எனில்‌ அது எண்‌ அடிப்படையில்‌ வடிவமைக்கப்பட வேண்டும்‌.
  35. நாம்‌ சிந்திக்கவும்‌ சிந்தித்ததை வெளிப்படுத்தவும்‌ உதவுவது – மொழி
  36. சதீஷ்‌ தவான்‌ விண்வெளி ஆய்வு நிறுவனம்‌ அமைந்துள்ள மாநிலம்‌ – ஆந்திர பிரதேசம்‌

கனவு பலித்தது

  1. நிலம்‌, நீர்‌, நெருப்பு, காற்று, ஆகாயம்‌ என்னும்‌ ஐந்தும்‌ கலந்தது இவ்வுலகம்‌ என்னும்‌ அறிவியல்‌ உண்மையை முதலில்‌ கூறியவர்‌ – தொல்காப்பியர்‌
  2. உலக உயிர்களை “ஓரறிவு முதல்‌ ஆறறிவு வரை வகைப்படுத்தியவர்‌ – தொல்காப்பியர்‌
  3. கடல்‌ நீர்‌ ஆவியாகி, மேகம்‌ குளிர்ந்து மழையாகப்‌ பொழியும்‌ என்ற அறிவியல்‌ செய்தி இடம்பெற்ற தமிழ்‌ இலக்கியங்கள் முல்லைப்பாட்டு பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை      
  4. திரவப்‌ பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும்‌ அவற்றின்‌ அளவைச்‌ சுருக்க முடியாது என்ற கருத்தைக்‌ கூறியவர்‌ – ஒளவையார்‌
  5. “ஆழ அமுக்கி முகக்கினும்‌ ஆழ்கடல் நீர்‌ நாழி முகவாது நால்‌ நாழி. இப்பாடலை பாடியவர்‌ – ஒளவையார்‌
  6. போர்களத்தில்‌ புண்பட்ட வீரர்‌ ஒருவரின்‌ காயத்தை வெண்ணிற ஊசியால்‌ தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல்‌ – பதிற்றுப்பத்து
  7. “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு. இவ்வரிகள்‌ இடம்பெற்ற நூல் பதிற்றுப்பத்து   
  8. தொலைவில்‌ உள்ள பொருளின்‌ உருவத்தை அருகில்‌ தோன்றச்‌ செய்ய முடியும்‌ என்று கூறிய அறிவியல்‌ அறிஞர்‌ – கலீலியோ
  9. தொலைவில்‌ உள்ள பொருளின்‌ உருவத்தை அருகில்‌ தோன்றச்‌ செய்ய முடியும்‌ என்ற அறிவியல்‌ கருத்து கூறிய தமிழர்‌ – கபிலர்‌ (நூல்‌ – திருவள்ளுவமாலை)
  10. “கோட்சுறா எறிந்தெனச்‌ சுருங்கிய நரம்பின்‌ முடிமுதிர்‌ பரதவர்‌ என்ற (அறுவை மருத்துவம்‌ பற்றி) வரிகள்‌ இடம்பெற்ற நூல்‌ நற்றிணை
  11. சுறா மீன்‌ தாக்கியதால்‌ ஏற்பட்ட புண்ணை நரம்பினால்‌ தைத்த செய்தியை கூறும்‌ நூல்‌ – நற்றிணை
  12. “தினையளவு போதாச்‌ சிறுபுல்நீர்‌ நீண்ட பனையளவு காட்டும்‌ என்ற வரிகளைப்‌ பாடியவர்‌ – கபிலர்
  13. இஸ்ரோவின்‌ மேனாள்‌ தலைவர்‌ – டாக்டர்‌. கே. சிவன்‌

தமிழ்‌ எழுத்துகளின்‌ வகையும்‌ தொகையும்‌

  1.  தமிழ்‌ மொழியின்‌ இலக்கண வகைகள்‌ – 5 வகைகள்‌ (எழுத்து, சொல்‌, பொருள்‌, யாப்பு, அணி)
  2. ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும்‌, வரிவடிவாக எழுதப்படுவதும்‌ எழுத்து எனப்படும்
  3. வாயைத்‌ திறத்தல்‌, உதடுகளை விரித்தல்‌, உதடுகளை குவித்தல்‌ ஆகிய செயல்பாடுகளால்‌ பிறக்கும்‌ எழுத்துக்கள்‌ – உயிர்‌ எழுத்துகள்‌. 
  4. உயிர்‌ குறில்‌ எழுத்துகள்‌ – அ, இ, உ, எ, ஓ 
  5. உயிர்‌ நெடில்‌ எழுத்துகள்‌ – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள
  6.  மாத்திரை என்பது ஒரு முறை கண்‌ இமைக்கவோ, ஒரு முறை கைநொடிக்கவோ ஆகும்‌ கால அளவாகும்‌.
  7. எழுத்துக்கள்‌ ஒலிக்கும்‌ காலஅளவு:

குறில்‌ எழுத்து                     –                   1 மாத்திரை

நெடில்‌ எழுத்து                  –                   2 மாத்திரை 

  1. மெய்‌ எழுத்து ஒலிக்கும்‌ கால அளவு – அரை மாத்திரை
  2. ஆய்த எழுத்து (ஃ) ஒலிக்கும்‌ கால அளவு – அரை மாத்திரை
  3. வல்லின மெய்யெழுத்துக்கள்‌ – க்‌, ச்‌, ட்‌, த்‌, ப்‌, ற்‌
  4. மெல்லின மெய்யெழுத்துகள்‌ – ங்‌, ஞ்‌, ண்‌, ந்‌, ம்‌, ன்‌
  5. இடையின மெய்யெழுத்துகள்‌ –ய்‌, ர்‌, ல்‌, வ்‌, ழ்‌, ள்‌
  6. உயிர்மெய்‌ எழுத்துகள்‌ உயிர்மெய்க்‌ குறில்‌, உயிர்மெய்‌ நெடில்‌ என இரு வகைப்படும்‌.
  7. விரிவான கருத்தை சுருக்கிச்‌ சொல்வதே பழமொழியின்‌ சிறப்பு.
  8. உழைத்துத்‌ தேடிய பொருளால்‌ நாம்‌ பெறுவது – உணவு, உடை, உறைவிடம்‌
  9. ‘Touch screen’ என்பதன்‌ தமிழாக்கம்‌ – தொடுதிரை
  10. ‘Anti clock wise’ என்பதன்‌ தமிழாக்கம்‌ – இடஞ்சுழி
  11. ‘Clock wise’ என்பதன்‌ தமிழாக்கம்‌ – வலஞ்சுழி
  12. ‘Search Engine’ என்பதன்‌ தமிழாக்கம்‌ – தேடுபொறி
  13. “நிலம்‌ தீ நீர்‌ வளி விசும்போடு ஐந்தும்‌ கலந்த மயக்கம்‌ உலகம்‌ ஆதலின்‌. இவ்வடிகள்‌ இடம்பெற்ற நூல்‌ – தொல்காப்பியம்‌
  14. தமிழ்‌ எண்களை பொருத்துக:
  1. 12                          சசா
  2. 35      –                  அங
  3. 46      –                  ஙரு
  4. 79      –                  கஉ
  5. 10      –                  எகூ
  6. 83      –                  க0                                                    விடை: 4 3 1 5 6 2
  1. அருகு, கோரை என்பதன்‌ இலைப்‌ பெயர்கள்‌ – புல்‌
  2. பனை, தென்னை என்பதன்‌ இலைப்பெயர்கள்‌-ஓலை

கேள்வி (94 – 100): 2000 ஆண்டுகளாக வழக்கில்‌ இருக்கும்‌ சில தமிழ்சொற்கள். அவை இடம்பெற்றுள்ள நூல்கள்‌ கண்டறிக:

  1. பாம்பு, முதலை, மீன்‌, செய்‌- குறுந்தொகை
  2. வேளாண்மை – கலித்தொகை, திருக்குறள்‌
  3. (i) கோடை- அகநானூறு                        (ii) மருந்து- அகநானூறு, திருக்குறள்‌
  4. பார் – பெரும்பாணாற்றுப்படை  
  5. மருந்து, அன்பு, மகிழ்ச்சி, அரசு – திருக்குறள்‌
  6. உலகம்‌, ஒழி, ஊர்‌, அன்பு, உயிர்‌, மகிழ்ச்சி, புகழ்‌, செல்‌, முடி – தொல்காப்பியம்‌
  7. உலகம்‌ – திருமுருகாற்றுப்படை

இயல் – II

சிலப்பதிகாரம்‌

  1. சிலப்பதிகாரத்தின்‌ ஆசிரியர்‌ – இளங்கோவடிகள்‌
  2. தமிழின்‌ முதல்‌ காப்பியம்‌, முத்தமிழ்க்‌ காப்பியம்‌, குடிமக்கள்‌ காப்பியம்‌ என்று அழைக்கப்படும்‌ நூல்‌ – சிலப்பதிகாரம்‌
  3. “திங்களைப்‌ போற்றுதும்‌ திங்களைப்‌ போற்றுதும்‌ என்ற பாடல்‌ வரிகள்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ – சிலப்பதிகாரம்‌
  4. “ஞாயிறு போற்றுதும்‌ ஞாயிறு போற்றுதும்‌ என்ற பாடல்‌ வரிகள்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ – சிலப்பதிகாரம்‌
  5. “மாமழை போற்றுதும்‌ மாமழை போற்றுதும்‌ என்ற பாடல்‌ வரிகளைப்‌ பாடியவர்‌ – இளங்கோவடிகள்‌
  6. பொருள் கூறுக
  7. திங்கள்                             –                   நிலவு
  8. கொங்கு                          –                   மகரந்தம்‌
  9. அளி                                     –                   கருணை
  10. நாமநீர்                               ‌-                   அச்சம்‌ தரும்‌ கடல்‌
  11. பொற்கோட்டு           –                   பொன்‌ மயமான சிகரம்‌
  12. அலர்                                   –                   மலர்தல்‌
  13. திகிரி                                   –                   ஆணைச்சக்கரம்‌
  14. மேரு                                   –                   இமயமலை
  15. இளங்கோவடிகள்‌ எந்த மரபைச்‌ சேர்ந்தவர்‌? சேர மரபு
  16. இளங்கோவடிகள்‌ சேர மரபை சேந்தவர்‌ எனக்‌ கூறும்‌ நூல்‌ எது? சிலப்பதிகாரப்‌ பதிகம்‌
  17. இரட்டைக்‌ காப்பியங்கள்‌ என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம்‌, மணிமேகலை
  18. சிலப்பதிகாரம்‌ எந்த காப்பிய வகையை சேர்ந்தது? ஐம்பெருங்காப்பியம்‌
  19. கழுத்தில்‌ சூடுவது எது? தார்‌ (அ) மாலை
  20. பிரித்து எழுதுக: பொற்கோட்டு   =   பொன்‌ + கோட்டு
  21. கொங்கலர்  =      கொங்கு + அலர்‌
  22. சேர்த்து எழுதுக:  அவன்‌ + அளிபோல்  =  அவனளிபோல்‌

 

காணி நிலம்‌

  1. பாரதியாரின்‌ இயற்பெயர்‌ – சுப்பிரமணியன்‌
  2. காணி நிலம்‌ வேண்டும்‌ எனப்‌ பாடியவர்‌ – பாரதியார்‌
  3. பொருள் கூறுக: காணி  —  நில அளவைக்‌ குறிக்கும்‌ சொல்‌
  4. மாடங்கள்‌   –                   மாளிகையின்‌ அடுக்குகள்‌
  5. சித்தம்            –                   உள்ளம்‌
  6. இருபதாம்‌ நூற்றாண்டின்‌ இணையற்ற கவிஞர்‌ – பாரதியார்
  7. இளமையில்‌ சிறப்பாக கவிபாடும்‌ திறன்‌ பெற்றவர்‌ – பாரதியார்‌
  8. பாரதியார்க்கு ‘பாரதி’ எனும்‌ பட்டம்‌ வழங்கியவர்‌ – எட்டயபுர மன்னர்‌
  9. மண்‌ உரிமைக்காகவும்‌ பெண்‌ உரிமைக்காகவும்‌ பாடியவர்‌ – பாரதியார்‌
  10. பாரதியார்‌ இயற்றிய நூல்கள்‌ – பாஞ்சாலி சபதம்‌, கண்ணன்‌ பாட்டு, குயில்பாட்டு
  11. சித்தம்‌ என்பதன்‌ பொருள்‌ – உள்ளம்
  12. பிரித்து எழுதுக: நிலத்தினிடையே                   =                 நிலத்தின்‌ இடையே
  13. சேர்த்து எழுதுக: நிலா + ஒளி             =                 நிலாவொளி
  14. பொருத்துக:
  15. முத்துச்சுடர்‌ போல      –                   நிலா ஒளி,
  16. தூய நிறத்தில்                  –                   மாடங்கள்‌,
  17. சித்தம்‌ மகிழ்ந்திட        –                   தென்றல்‌

சிறகின்‌ ஓசை

  1. “வலசை போதல்‌’ என்பது எதைக்‌ குறிக்கிறது? பறவைகள்‌ இடம்‌ பெயர்தலை
  2. பறவைகள்‌ எவற்றிற்காக இடம்‌ பெயர்கின்றன? உணவு, இருப்பிடம்‌, தட்ப வெப்பநிலை மாற்றம்‌, இனப்பெருக்கம்‌
  3. எவற்றை அடிப்படையாகக்‌ கொண்டு பறவைகள்‌ இடம்‌ பெயர்கின்றன? நிலவு, விண்மீன்‌, புவிஈர்ப்புப்‌ புலம்‌
  4. வலசையின்‌ போது பறவையின்‌ உடலில்‌ ஏற்படும்‌ மாற்றங்கள்‌ – தலையில்‌ சிறகு வளர்தல்‌, இறகுகளின்‌ நிறம்‌ மாறுதல்‌, உடலில்‌ கற்றையாக முடி வளர்தல்‌
  5. சிறகடிக்காமல்‌ கடலையும்‌ தாண்டிப்‌ பறக்கும்‌ பறவை – கப்பல்‌ பறவை
  6. கப்பல்‌ பறவை தரையிறங்காமல்‌ பறக்கும்‌ தூரம்‌ – 400 கிலோமீட்டர்‌
  7. கப்பல்‌ பறவை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? கப்பல்‌ கூழைக்கடா (அல்லது) கடற்கொள்ளைப்‌ பறவை
  8. “நாராய்‌, நாராய்‌, செங்கால்‌ நாராய்‌ என்ற பாடலைப்‌ பாடியவர்‌ – சத்தி முத்தப்புலவர்
  9. சத்தி முத்தப்புலவர்‌ வாழ்ந்த காலம்‌ 1500 ஆண்டுகளுக்கு முன்பு
  10. “தென்‌ திசைக்‌ குமரிஆடி வட திசைக்கு ஏகுவீர்‌ ஆயின்‌ என்ற அடிகள்‌ எதைக்‌ குறிக்கிறது? பறவைகள்‌ வலசை செல்லுதல்‌
  11. வெளிநாட்டு பறவைகளுக்கு புகலிடமாக திகழ்வது – தமிழ்நாடு
  12. தற்போது வெகுவாக அழிந்து வரும்‌ பறவையினம்‌ எது? சிட்டுக்‌
  13. சிட்டுக்குருவி எந்த பறவையினம்‌? கூடுகட்டி வாழும்‌ பறவையினம்‌
  14. சிட்டுக்குருவி எத்தனை முட்டைகள்‌ இடும்‌? 3 முட்டைகள்‌ முதல்‌ 6 முட்டைகள்‌ வரை
  15. சிட்டுக்குருவி அடைகாக்கும்‌ காலம்‌ – 14 நாட்கள்‌
  16. சிட்டுக்குருவிகள்‌ வாழத்‌ தகுதி அற்ற பகுதி – துருவ பகுதி
  17. சிட்டுக்குருவியின்‌ வாழ்நாள்‌ – 10 முதல்‌ 13 ஆண்டுகள்‌
  18. சிட்டுக்குருவியின்‌ உணவு – தானியங்கள்‌, புழு பூச்சிகள்‌, மலர்‌ அரும்புகள்‌, தேன்‌
  19. “சிட்டாய்‌ பறந்து விட்டான்‌ என்பது விரைவாக செல்பவனை குறிக்கிறது.
  20. பறவைகளை காப்பாற்ற நாம்‌ வளர்க்க வேண்டிய மரம்‌ – ஆல்‌, அரசு
  21. “காக்கைகுருவி எங்கள்‌ சாதி என்று பாடியவர்‌ – பாரதியார்‌
  22. பறவையியல்‌ ஆய்வாளர்களுக்கு முன்னோடி – டாக்டர்‌. சலீம்‌ அலி
  23. “இந்தியாவின்‌ பறவை மனிதர்‌ என அழைக்கப்படுபவர்‌ – டாக்டர்‌. சலீம்‌ அலி
  24. டாக்டர்‌ சலீம்‌ அலி வாழ்க்கை வரலாற்று நூலின்‌ பெயர்‌ சிட்டுக்குருவியின்‌ வீழ்ச்சி
  25. உலகில்‌ நெடுந்தொலைவு பயணம்‌ செய்யும்‌ பறவையினம்‌ – ஆர்டிக்‌ ஆலா
  26. ஆர்டிக்‌ ஆலா பயணம்‌ செய்யும்‌ தூரம்‌ – 22, 000 கிமீ
  27. பறவை பற்றிய படிப்பு – ஆர்னித்தாலஜி
  28. உலகச்‌ சிட்டுக்குருவிகள்‌ நாள்‌ – மார்ச்‌ – 20
  29. பிரித்து எழுதுக: தட்பவெப்பம்‌                                =                 தட்பம்‌ + வெப்பம்‌
  30. சேர்த்து எழுதுக: தரை + இறங்கும்                   =                 தரையிறங்கும்‌

கிழவனும்‌ கடலும்‌

  1. “கிழவனும்‌ கடலும்‌ என்ற ஆங்கிலப்‌ புதினம்‌ நோபல்‌ பரிசு பெற்ற வருடம்‌ – 1954
  2. “கிழவனும்‌ கடலும்‌ என்ற புதினத்தின்‌ ஆசிரியர்‌ – எர்னெஸ்ட்‌ ஹெமிங்வே

முதலெழுத்தும்‌ சார்பெழுத்தும்‌

  1. எழுத்துகள்‌ எத்தனை வகைப்படும்‌? இரண்டு
  2. எழுத்துகளின்‌ வகைகள்‌ யாவை? முதல்‌ எழுத்து, சார்பு எழுத்து
  3. முதல்‌ எழுத்துகள்‌ என்பது – உயிர்‌ எழுத்து (12) மற்றும்‌ மெய்‌ எழுத்து (18)
  4. பிற எழுத்துகள்‌ தோன்றுவதற்கும்‌, இயங்குவதற்கும்‌ முதல்‌ காரணமாய்‌ அமைவது – முதல்‌ எழுத்துகள்‌
  5. முதல்‌ எழுத்துகளைச்‌ சார்ந்து வரும்‌ எழுத்துக்கள்‌ – சார்பு எழுத்துகள்‌
  6. சார்பு எழுத்துகள்‌ எத்தனை வகைப்படும்‌? 10 வகைப்படும்‌
  7. மெய்‌ மற்றும்‌ உயிர்‌ எழுத்துகள்‌ சேர்வதால்‌ தோன்றுவது – உயிர்மெய்‌
  8. மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம்‌ பெற்றது- ஆய்தம்‌
  9. ஆய்த எழுத்து வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அஃகேனம்‌
  10. நுட்பமான ஒலிப்பு முறையை உடையது- ஆய்தம்‌
  11. ஆயுத எழுத்து ஒரு சார்பெழுத்து.
  12. பரந்து விரிந்து இருப்பதால்‌ கடலுக்கு பெயர் ‌– பரவை
  13. புள் என்பதன்‌ வேறுபெயர்‌- பறவை
  14. ‘சரணாலயம்‌’ என்பதன்‌ வேறு பெயர் ‌- புகிடம்‌
  15. மொழிபெயர்ப்பு:

Migration                                         –                    வலசை

  1. Gravitational field                   –                   புவி ஈர்ப்புப்புலம் 
  2. Sanctuary                                         –                   புகலிடம்

திருக்குறள்‌

  1. உலகுக்குத்‌ தொடக்கமாக விளங்குபவன்‌ – ஆதிபகவன்
  2. எழுத்துகளுக்குத்‌ தொடக்கமாய்‌ அமைவது – அகரம்‌
  3. முடியாத செயலையும்‌ முடித்து காட்டுபவர் ‌- பெரியோர்‌
  4. ஒருவருக்கு மிகச்‌ சிறந்த அணியாய்‌ அமைவது – பணிவு, இன்சொல்‌
  5. திருவள்ளுவர்‌ எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர்‌? 2000 ஆண்டுகள்‌
  6. திருவள்ளுவரின்‌ வேறு பெயர்கள்‌ – வான்புகழ்‌ வள்ளுவர்‌, தெய்வப்‌ புலவர்‌, பொய்யில்‌ புலவர்‌
  7. திருக்குறள்‌ எத்தனை பிரிவுகளை உடையது? மூன்று பிரிவுகள்‌ 
  8. திருக்குறளில்‌ உள்ள அதிகாரங்கள் ‌-133
  9. திருக்குறளின்‌ குறட்பாக்கள்‌ எத்தனை? 1330
  10. திருக்குறள்‌ எவ்வாறு அழைக்கப்படுகிறது? உலகப்‌ பொதுமறை, வாயுறை வாழ்த்து
  11. திருக்குறள்‌ எத்தனை மொழிகளில்‌ மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது? 107
  12. திருக்குறளின் இயல்கள் – 9 இயல்கள்
  13. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது- அறிவுடையமக்கள்‌
  14. பொருள் கூறுக என்பு – எலும்பு 
  15. 2016 பாராஒலிம்பிக்‌ போட்டி எங்கு நடைபெற்றது? ரியோ நகரில்‌ 
  16. 2016 பாராஒலிம்பிக்‌ போட்டியில்‌ தங்கம்‌ வென்றவர்‌ – மாரியப்பன்‌ 
  17. மாரியப்பன்‌ தங்கம்‌ வென்ற விளையாட்டு – உயரம்‌ தாண்டுதல்‌

 

இயல் – III

அறிவியல்‌ ஆத்திசூடி

  1. உடல்‌ நோய்க்கு ஔடதம்‌ தேவை.
  2. நண்பர்களுடன்‌ ஒருமித்து விளையாடு.
  3. கண்டறி என்னும்‌ சொல்லைப்‌ பிரித்து எழுதக்‌ கிடைப்பது – கண்டு
  4. “ஓய்வற’ என்னும்‌ சொல்லைப்‌ பிரித்து எழுதக்‌ கிடைப்பது – ஓய்வு + அற
  5. “ஏன்‌ + என்று’ என்பதனைச்‌ சேர்த்து எழுதக்‌ கிடைப்பது – ஏனென்று
  6. “ஔடதம்‌ + ஆம்‌’ என்பதனைச்‌ சேர்த்து எழுதக்‌ கிடைப்பது – ஔடதமாம்‌
  7. எதிர்ச்சொல் காண்க 

அணுகு                            –                   விலகு

  1. ஐயம்                                    –                   தெளிவு
  2. ஊக்கம்                             –                   சோர்வு
  3. உண்மை                       –                   பொய்மை
  4. அகர வரிசையில்‌ அறிவுரைகளைச்‌ சொல்லும்‌ இலக்கியம்‌ – ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி பாரதியார்‌

  1. தம்மை ஒத்த அலைநீளத்தில்‌ சிந்திப்பவர்‌ என்று மேதகு அப்துல்‌ கலாம்‌ அவர்களால்‌ பாரட்டப்‌ பெற்றவர்‌ – நெல்லை சு. முத்து
  2. விக்ரம்‌ சாராபாய்‌ விண்வெளி மையம்‌, சதீஷ்‌ தவான்‌ விண்வெளி மையம்‌, இந்திய விண்வெளி மையம்‌ ஆகிய நிறுவனங்களில்‌ பணியாற்றியவர்‌ – நெல்லை சு. முத்து
  3. நெல்லை சு. முத்து வெளியிட்டுள்ள நூல்களின்‌ எண்ணிக்கை – எண்பதுக்கும்‌ மேற்பட்ட (80+)
  4. “இயன்றவரை என்பதன்‌ பொருள்‌ – முடிந்தவரை
  5. “ஒருமித்து என்பதன்‌ பொருள் ‌– ஒன்றுட்டு
  6. ஔடதம் என்பதன் பொருள் – மருந்து 
  7. எதனை “தெளிந்து சொல்‌’ என்று நெல்லை சு. முத்து கூறுகிறார்‌? ஐயம்‌
  8. எதில்‌ “சிந்தனை கொள்‌’ என்று நெல்லை சு. முத்து கூறுகிறார்‌? அறிவியல்‌
  9. எதில்‌ “அணுகு என்று நெல்லை சு. முத்து கூறுகிறார்‌? ஈடுபாட்டுடன்‌
  10. எது “வெற்றிதரும்‌ என்று நெல்லை சு. முத்து கூறுகிறார்‌? ஊக்கம்‌
  11. எவ்வாறு “உழை’ என்று நெல்லை சு. முத்து கூறுகிறார்‌? ஓய்வற

அறிவியலால்‌ ஆள்வோம்‌

  1. “ஆழ்க்கடல்‌’ என்னும்‌ சொல்லை பிரித்து எழுதக்‌ கிடைப்பது – ஆழம்‌ + கடல்‌
  2. “விண்வெளி’ என்னும்‌ சொல்லை பிரித்து எழுதக்‌ கிடைப்பது – விண்‌ + வெளி
  3. “நீலம்‌ + வான்‌’ என்பதனைச்‌ சேர்த்து எழுதக்‌ கிடைப்பது – நீலவான்‌
  4. “இல்லாது + இயங்கும்‌’ என்பதனைச்‌ சேர்த்து எழுதக்‌ கிடைப்பது – இல்லாதியங்கும்‌
  5. இணையவலை உதவியால்‌ உலகத்தையே நம்‌ உள்ளங்கையில்‌ கொடுக்கின்றார்கள்‌.
  6.   வானை அளப்போம்‌ கடல்‌ மீனையளப்போம்‌

    சந்திர மண்டலத்தியல்‌ கண்டுதெளிவோம்‌

    சந்தி தெருப்பெருக்கும்‌ சாத்திரம்‌ கற்போம்‌ என்று பாடியவர்‌ – பாரதியார்‌

  7. செயற்கைக்கோள்கள்‌ உதவியுடன்‌ செய்தித்‌ தொடர்பில்‌ சிறந்துள்ளோம்‌.
  8. மனிதன்‌, எலும்பும்‌ தசையும்‌ இல்லாமல்‌ செயல்படும்‌ எந்திர மனிதனை படைத்து விட்டான்‌.
  9. மனிதன்‌, அணு பிளந்து ஆற்றலை எடுத்து அனைத்துத்‌ தேவைகளையும்‌ நிறைவேற்றி கொள்ள முயல்கிறான்‌.

கணியனின்‌ நண்பன்‌

  1. நுட்பமாகச்‌ சிந்தித்து அறிவது – நுண்ணறிவு
  2. தானே இயங்கும்‌ இயந்திரம்‌ – தானியங்கி
  3. ‘நின்றிருந்த’ என்னும்‌ சொல்லைப்‌ பிரித்து எழுதக்‌ கிடைப்பது – நின்று + இருந்த
  4. ‘அவ்வுருவம்‌’ என்னும்‌ சொல்லைப்‌ பிரித்து எழுதக்‌ கிடைப்பது – அ உருவம்‌
  5. மருத்துவம்‌ துறை’ என்பதனைச்‌ சேர்த்து எழுதக்‌ கிடைப்பது – மருத்துவத்துறை
  6. “செயல்‌ + இழக்க’ என்பதனைச்‌ சேர்த்து எழுதக்‌ கிடைப்பது – செயலிழக்க
  7. “நீக்குதல்‌’ என்னும்‌ சொல்லின்‌ எதிர்ச்சொல்‌ – சேர்த்தல்‌
  8. ‘எளிது’ என்னும்‌ சொல்லின்‌ எதிர்ச்சொல்‌ – அரிது
  9. மனிதன்‌ தன்‌ வேலைகளை எளிதாக்கக்‌ கண்டுபிடித்தவை – எந்திரங்கள்‌
  10. தானியங்கிகளுக்கும்‌, எந்திர மனிதர்களுக்கும்‌ இடையே உள்ள முக்கிய வேறுபாடு – செயற்கை நுண்ணறிவு
  11. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன்‌ கணினியின்‌ பெயர்‌ – டீப்‌ ப்ளூ (Deep Blue)
  12. “சோபியா” ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு – சவுதி அரேபியா
  13. “ரோபோ” (Robot) என்னும்‌ சொல்லை முதன்முதலாகப்‌ பயன்படுத்தியவர்‌ – காரல்‌ கபெக்‌
  14. “ரோபோ என்ற சொல்லுக்கு அடிமை என்பது பொருள்‌.
  15. காரல்‌ கபெக்‌ என்பவர்‌ எந்த நாட்டைச்‌ சேர்ந்தவர்‌? – செக்‌ குடியரசு
  16. நுட்பமான, கடினமான, ஒரே மாதிரியான வேலைகளை மனிதரை விட விரைவாகத்‌ தானே செய்து முடிக்கும்‌ எந்திரம்‌ – தானியங்கி
  17. “Sensors” என்பதன்‌ தமிழ்‌ சொல்‌ – நுண்ணுணர்வுக்‌ கருவிகள்‌
  18. “இவை தோற்றத்தில்‌ மனிதர்‌ போல இல்லாமலும்‌ இருக்கலாம்‌, ஆனால்‌ மனிதர்களைப்‌ போலச்‌ செயல்களை நிறைவேற்றும்‌ என்று தானியங்கிகளுக்கு விளக்கம்‌ தரும்‌ கலைக்களஞ்சியம்‌ – பிரிட்டானிக்கா
  19. தானியங்கியின்‌ செயல்களை கணினி கட்டுப்படுத்தும்‌.
  20. பிற கோள்களுக்குச்‌ சென்று ஆய்வு நடத்தவும்‌, செயற்கைகோள்களை இயக்கவும்‌ தானியங்கிகள்‌ பயன்படுகிறது.
  21. கேரி கேஸ்புரோவ்‌ எந்த விளையாட்டில்‌ சிறந்தவர்‌? சதுரங்கம்‌
  22. டீப்‌ புளு (Deep Blue) என்னும்‌ மீத்திறன்‌ கணினியை உருவாக்கிய நிறுவனம்‌ – ஐ.பி. எம்‌ (IBM)
  23. கேரி கேஸ்புரோவ்‌ மற்றும்‌ Deep Blue (டீப்‌ புளு) இடையே எப்போது சதுரங்கப்‌ போட்டி நடந்தது? மே1997
  24. உலகிலேயே முதன்‌ முதலாக எந்த நாடு ரோபோவுக்குக்‌ குடியுரிமை வழங்கியது? சவுதி அரேபியா
  25. முதன்முதலில்‌ குடியுரிமை பெற்ற ரோபோவின்‌ பெயர்‌ – சோபியா
  26. ஜக்கிய நாடுகள்‌ சபை யாருக்கு ‘புதுமைகளின்‌ வெற்றியாளர்‌’ என்னும்‌ பட்டத்தை வழங்கியது? சோபியா

ஒளி பிறந்தது

  1. அப்துல்‌ கலாம்‌ ஐயாவிற்கு தமிழில்‌ பிடித்த நூல்‌ – திருக்குறள்‌
  2. எந்த நூலைப்‌ படிக்கும்போது அப்துல்‌ கலாம்‌ ஐயா அறிவு, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய மூன்றும்‌ பெற்றேன்‌ என்று கூறுகிறார்‌? விளக்குகள்‌ பல தந்த ஒளி
  3. லிலியன்‌ வாட்சன்‌ எழுதிய “விளக்குகள்‌ பல தந்த ஒளி “என்னும்‌ நூல்‌ அப்துல்‌ கலாம்‌ ஐயாவிற்கு பிடிக்கும்‌.
  4. அப்துல்‌ கலாம்‌ ஐயா எதனைப்‌ பயன்படுத்தி முந்நூறு கிராம்‌ எடையுள்ள செயற்கைகோளை உருவாக்கினார்‌? கார்பன்‌ இழையை
  5. அப்துல்‌ கலாம்‌ ஐயா இந்தியா அணு உலைகள்‌ மூலம்‌ மின்சாரம்‌ தயாரிப்பதில்‌ முன்னணியில்‌ உள்ளோம்‌ என்று கூறியுள்ளார்‌.
  6. பாதுகாப்புத்‌ துறையைப்‌ பொறுத்தவரை அக்னி மற்றும்‌ பிரித்வி ஏவுகணைகளைச்‌ செலுத்துவதில்‌ வெற்றி பெற்றுள்ளோம்‌ என்று அப்துல்‌ கலாம்‌ ஐயா கூறுகிறார்‌.
  7. 525 கிலோ எடையுள்ள ஆளில்லாச்‌ செயற்கைக்கோளை இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ளது 

மொழி முதல்‌, இறுதி எழுத்துகள்‌ மொழி முதல்‌ எழுத்துகள்‌

 

  1. மொழி என்பதற்குச்‌ “சொல்‌’ என்று பொருள்‌.
  2. முதலில்‌ வரும்‌ எழுத்துக்களை “மொழி முதல்‌’ எழுத்துகள்‌ என்பர்‌.
  3. உயிர்‌ எழுத்துக்கள்‌ பன்னிரண்டும்‌ சொல்லின்‌ முதலில்‌ வரும்‌.
  4. க ச த ந ப ம ஆகிய வரிசைகளில்‌ உள்ள எல்லா உயிர்மெய்‌ எழுத்துகளும்‌ சொல்லின்‌ முதலில்‌ வரும்‌
  5. ங ஞ ய வ ஆகிய உயிர்மெய்‌ எழுத்து வரிசைகளில்‌ சில எழுத்துகள்‌ மட்டுமே சொல்லின்‌ முதலில்‌ வரும்‌.
  6. “ங” வரிசையில்‌ “ங” என்னும்‌ ஓர்‌ எழுத்து மட்டுமே சொல்லின்‌ முதலில்‌ வரும்‌.
  7. “ஞ” வரிசையில்‌ ‘ஞ, ஞா, ஞெ, ஞொ்‌ ஆகிய நான்கு எழுத்துகளும்‌ சொல்லின்‌ முதலில்‌ வரும்‌.
  8. ய‌ வரிசையில்‌ ய, யா, யு, யூ, யோ, யெள’ ஆகிய ஆறு எழுத்துகளும்‌ சொல்லின்‌ முதலில்‌ வரும்‌.
  9. “வ’ வரிசையில்‌ “வ, வா, வி, வீ, வெ, வே, வை, வெள: ஆகிய எட்டு எழுத்துகளும்‌ சொல்லின்‌ முதலில்‌ வரும்‌.

மொழிக்கு முதலில்‌ வராத எழுத்துகள்‌

  1. மெய்யெழுத்துகள்‌ பதினெட்டும்‌ சொல்லின்‌ முதலில்‌ வாரா.
  2. “ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகிய எட்டு உயிர்மெய்‌ எழுத்துகளின்‌ வரிசையில்‌ ஓர்‌ எழுத்து கூடச்‌ சொல்லின்‌ முதலில்‌ வராது.
  3. ஆய்த எழுத்து சொல்லின்‌ முதலில்‌ வராது.
  4. “ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய்‌ எழுத்து வரிசைகளில்‌ மொழி முதலில்‌ வருவதாகக்‌ குறிப்பிடப்பட்ட எழுத்துக்கள்‌ தவிர பிற எழுத்துக்கள்‌ சொல்லின்‌ முதலில்‌ வாரா.

மொழி இறுதி எழுத்துகள்‌

  1. சொல்லின்‌ இறுதியில்‌ வரும்‌ எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள்‌ என்பர்‌.
  2. உயிர்‌ எழுத்துகள்‌ பன்னிரண்டும்‌ மெய்யுடன்‌ இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில்‌ வரும்‌.
  3. ‘ஞ்‌, ண்‌, ந்‌, ம்‌, ய்‌, ர்‌, ல்‌, வ்‌, ழ்‌, ள்‌, ன்‌’ ஆகிய மெய்யெழுத்துகள்‌ பதினொன்றும்‌ மொழியின்‌ இறுதியில்‌ வரும்‌. (உரிஞ்‌, வெரிந்‌, அவ்‌)

மொழி இறுதியாகா எழுத்துகள்‌

  1. சொல்லின்‌ இறுதியில்‌ உயிரெழுத்துகள்‌ தனித்து வருவதில்லை.
  2. உயிர்‌ எழுத்துகள்‌ மெய்யெழுத்துடன்‌ இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின்‌ இறுதியில்‌ வரும்‌.
  3. அளபெடை எழுத்துகளில்‌ இடம்பெறும்‌ போது உயிர்‌ எழுத்துகள்‌ சொல்லின்‌ இறுதியில்‌ வரும்‌.
  4. ஆய்த எழுத்து சொல்லின்‌ இறுதியில்‌ வராது.
  5. க்‌, ங்‌, ச்‌, ட்‌, ந்‌, த்‌, ப்‌ ஆகிய ஏழு மெய்‌எழுத்துகளும்‌ சொல்லின்‌ இறுதியாக வராது.
  6. உயிர்மெய்‌ எழுத்துகளுள்‌ “ங” எழுத்து வரிசை சொல்லின்‌ இறுதியில்‌ வராது.
  7. எகர வரிசையில்‌ “கெ’ முதல்‌ “னெ’ முடிய எந்த உயிர்மெய்‌ எழுத்தும்‌ மொழி இறுதியில்‌ வருவதில்லை.
  8. ஒகர வரிசையில்‌ “நொ” தவிர பிற உயிர்மெய்‌ எழுத்துகள்‌ மொழி இறுதியில்‌ வருவதில்லை.
  9. “நொ்‌ என்னும்‌ எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத்‌ துன்பம்‌ என்னும்‌ பொருளில்‌ வரும்‌.

சொல்லின்‌ இடையில்‌ வரும்‌ எழுத்துகள்‌

  1. மெய்‌ எழுத்துகள்‌ பதினெட்டும்‌ சொல்லின்‌ இடையில்‌ வரும்‌.
  2. உயிர்மெய்‌ எழுத்துகள்‌ சொல்லின்‌ இடையில்‌ வரும்‌.
  3. ஆய்த எழுத்து சொல்லின்‌ இடையில்‌ மட்டுமே வரும்‌.
  4. அளபெடை மட்டுமே உயிர்‌ எழுத்துகள்‌ சொல்லின்‌ இடையில்‌ வரும்‌
  5. “இராமன்‌ விளைவு’ கண்டுபிடிப்பு வெளியான ஆண்டு, மாதம்‌, நாள்‌ – 1928 பிப்ரவரி 28
  6. தேசிய அறிவியல்‌ நாள்‌ – 28 பிப்ரவரி
  7. அப்துல்‌ கலாம்‌ ஐயாவின்‌ சுயசரிதை நூல்‌- அக்னிச்சிறகுகள்‌

கலைச்‌ சொற்கள்‌

  1. Artificial Intelligence       –     செயற்கைநுன்ணறிவு
  2. Supercomputer           –       மீத்திறன்கணினி
  3. Satelite                  –      செயற்கைக்கோள்
  4. Intelligence         –          நுண்ணறிவு

 

6 ஆம்‌ வகுப்பு பழைய புத்தகம்‌

இயல்‌ 1- முதல்‌ பருவம்‌

திருவருட்பா

  1. “கண்ணில்‌ கலந்தான்‌ கருத்தில்‌ கலந்தான்‌ எனப்‌ பாடியவர்‌ – வள்ளலார்‌ (நூல்‌ – திருவருட்பா)
  2. இராமலிங்க அடிகளாரின்‌ சிறப்புப்‌ பெயர்‌ – திருவருட்பிரகாச வள்ளலார்‌
  3. இராமலிங்க அடிகளார்‌ பிறந்த மாவட்டம்‌ – கடலூர்‌ (மருதூர்‌)
  4. இராமலிங்க அடிகளாரின்‌ பெற்றோர்கள்‌ – இராமையா, சின்னம்மையார்‌
  5. ஜீவகாருண்ய ஒழுக்கம்‌, மனுமுறை கண்ட வாசகம்‌ ஆகிய நூல்களின்‌ ஆசிரியர்‌ – வள்ளலார்‌
  6. யாருடைய பாடல்கள்‌ “திருவருட்பா’ என அழைக்கப்படுகிறது? வள்ளலார்‌
  7. சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர்‌ – வள்ளலார்
  8. அனைத்து மதங்களின்‌ நல்லிணக்கத்திற்காகத்‌ தொடங்கிய சங்கம்‌ – சன்மார்க்க சங்கம்‌
  9. வள்ளலார்‌ அறிவுநெறி விளங்க நிறுவியது – ஞானசபை
  10. வள்ளலார்‌, பசித்துயர்‌ போக்கி மக்களுக்கு உணவளிக்க நிறுவியது – அறச்சாலை
  11. வள்ளலார்‌ சத்திய தருமசாலை தொடங்கிய இடம்‌ – வடலூர்‌
  12. வள்ளலார்‌ பிறந்த ஆண்டு – 1823
  13. வள்ளலார்‌ இறந்த ஆண்டு – 1874

திருக்குறள்‌

பொருள்‌ தருக:

  1. ஆர்வலர்‌                         –                   அன்புடையவர்‌
  2. புன்கணீர்                       –                   துன்பம்‌ கண்டு பெருகும்‌ கண்ணீர்‌
  3. என்பு                                   –                   எலும்பு
  4. ஆருயிர்                           –                   அருமையான உயிர்‌
  5. ஈனும்‌                                 –                   தரும்‌
  6. ஆர்வம்                             ‌-                   விருப்பம்‌
  7. நண்பு                                  –                   நட்பு
  8. மறம்‌                                     –                   வீரம்‌
  9. வற்றல்‌ மரம்                  –                  வாடிய மரம்‌
  10. புறத்துறுப்பு                   –                   உடல்‌ உறுப்புகள்‌
  11. அகத்துறுப்பு                –                   மனதின்‌ உறுப்பு, அன்பு 
  12. வன்பாற்கண்             –                   பாலை நிலத்தில்‌
  13. தளிர்த்தற்று                 –                   தளிர்த்ததுபோல
  14. என்பிலதனை வெயில்போலக்‌’. இதில்‌ “என்பிலதனை என்பது எது? புழு (எலும்பு இல்லாதது) 

பிரித்து எழுதுக:

  1. அன்பகத்து இல்லா = அன்பு + அகத்து + இல்லா
  2. வன்பாற்கண்‌ – வன்பால்‌ + கண்‌
  3. தளிர்த்தற்று – தளிர்த்து + அற்று
  4. திருவள்ளுவரின்‌ காலம்‌ – கி.மு. 31
  5. செந்நாப்போதார்‌, தெய்வப்புலவர்‌, நாயனார்‌ என்றெல்லாம்‌ அழைக்கப்படுபவர்‌ – திருவள்ளுவர்‌
  6. முப்பால்‌, பொதுமறை, தமிழ்மறை, உலகப்பொதுமறை – திருக்குறள்‌
  7. 2013 இன்‌ திருவள்ளுவர்‌ ஆண்டு: 2044 (2013 + 31)
  8. “அன்பில்லாத வாழ்க்கை தளிர்க்காது’ என்பதில்‌ “அன்பில்லாத வாழ்க்கை” எதனைப்‌ போன்றது? பாலை நிலம்‌ போன்றது

தமிழ்த்தாத்தா உ.வே. சா

  1. உ.வே. சா அருந்தமிழ்‌ இலக்கியங்களை தேடித்தேடி அலைந்த இடம்‌ – கொடுமுடி (ஈரோடு)
  2. ஓலைச்சுவடி எழுத்துகளில்‌ – புள்ளி இருக்காது
  3. ஓலைச்சுவடி எழுத்துகளில்‌ – ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது
  4. ஓலைச்சுவடியில்‌, பேரன்‌ என்பதனை “பெரன’ என்றும்‌ வாசிக்கலாம்‌, “பேரன’ என்றும்‌ வாசிக்கலாம்.
  5. ஓலைச்சுவடியில்‌, முன்னும்‌ பின்னும்‌ உள்ள வரிகளை வைத்துப்‌ பொருள்‌ கொள்ளுதல்‌ வேண்டும்.
  6. குறிஞ்சிப்‌ பாட்டில்‌ குறிப்பிடப்படும்‌ பூக்களின்‌ எண்ணிக்கை – 99
  7. உ.வே. சா தேடி அலைந்த ஓலைச்சுவடியில்‌ எத்தனை பூக்களுடைய பெயர்கள்‌ தெளிவாக இருந்தன? 96
  8. கீழ்த்திசைச்‌ சுவடிகள்‌ நூலகம்‌ எங்குள்ளது? சென்னை
  9. அரசு ஆவணக்‌ காப்பகம்‌ எங்குள்ளது? சென்னை
  10. உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌ எங்குள்ளது? சென்னை
  11. சரசுவதிநூலகம்‌ எங்குள்ளது? தஞ்சாவர்‌
  12. குறிஞ்சிப்‌ பாட்டின்‌ ஆசிரியர்‌- கபிலர்‌
  13. உ.வே. சாவின்‌ இயற்பெயர்‌ – வேங்கடரத்தினம்‌
  14. உ.வே. சா – உத்தமதானபுரம்‌ வேங்கடசுப்புவின்‌ மகனார்‌ சாமிநாதன்‌
  15. உ.வே. சாவின்‌ ஆசிரியர்‌ – மகாவித்துவான்‌ மீனாட்சிசுந்தரம்‌
  16. உ.வே. சாவுக்கு அவருடைய ஆசிரியர்‌ வைத்த பெயர்‌ – சாமிநாதன்‌
  17. உ.வே. சா பிறந்த ஆண்டு – 1855
  18. உ.வே. சா இறந்த ஆண்டு – 1942
  19. உ.வே. சா தம்‌ வாழ்க்கை வரலாற்றை எந்த இதழில்‌ தொடராக எழுதினார்‌? ஆனந்த விகடன்‌
  20. உ.வே. சா வின்‌ வாழ்க்கை வரலாற்று நூல் ‌- என்‌ சரிதம்‌
  21. டாக்டர்‌. உ.வே. சா நூல்‌ நிலையம்‌ நிறுவப்பட்ட ஆண்டு – 1942 (பெசண்ட்‌ நகர்‌, சென்னை)
  22. உ.வே. சா அவர்களின்‌ தமிழ்ப்‌ பணிகளை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்‌ – ஜி. யு. போப்‌, சூலியல்‌ வின்சோன்‌
  23. நடுவணரசு உ.வே. சாவுக்கு அஞ்சல்‌ தலை வெளியிட்ட ஆண்டு – 2006
  24. “கடைசி வரை நம்பிக்கை’ சிறுகதையின்‌ ஆசிரியர்‌ – அரவிந்த்‌ குப்தா
  25. “டென்‌ லிட்டில்‌ பிங்கர்ஸ்‌’ நூலின்‌ ஆசிரியர்‌ – அரவிந்த்‌ குப்தா
  26. சடகோ சசாகியின்‌ தோழி – சிசுகோ
  27. ஜப்பானியர்‌ வணங்கும்‌ பறவை – கொக்கு
  28. சடகோ செய்த காகித கொக்குகளின்‌ எண்ணிக்கை – 644
  29. சடகோ தோழிகள்‌ செய்த கொக்குகளின்‌ எண்ணிக்கை – 356
  30. சடகோவுக்கான நினைவாலையத்தை அவளுடைய தோழிகள்‌ எங்கு கட்டினர்‌? ஹிரோசிமா
  31. சடகோவுக்கு நம்பிக்கை தந்தவர்‌ – சிசுகோ
  32. டேரிபாக்ஸ்‌ எந்த நாட்டைச்‌ சேர்ந்தவர்‌? கனடா
  33. டேரிபாக்ஸ்‌ எந்த விளையாட்டில்‌ சிறந்து விளங்கினார்‌? கூடைப்பந்து
  34. டேரிபாக்ஸ்க்கு வந்த நோய்‌ – புற்றுநோய்‌
  35. டேரிபாக்ஸ்‌ புற்றுநோய்‌ ஓட்டம்‌ எந்நாளில்‌ நடத்தப்படுகிறது? 15 செப்டம்பர்‌

 

இயல்‌ 02

  1. “நாய்க்கால்‌ சிறுவிரல்‌ போல்‌ நன்கணியராயினும்‌ ஈக்கால்‌ துணையும்‌ உதவாதார்‌ நட்பென்னாம்‌ இப்பாடலை பாடியவர்‌ – சமண முனிவர்‌ (நாலடியார்‌)
  2. “சேய்த்தானும்‌ சென்று கொளல்வேண்டும்‌ செய்விளைக்கும்‌ வாய்க்கால்‌ அனையார்‌ தொடர்பு – சமண முனிவர்‌ நாய்க்கால்                     –                   நாயின்‌ கால்‌
  3. ஈக்கால்‌                             –                   ஈயின்‌ கால்‌

    அணியர்                           –                   நெருங்கி இருப்பவர்‌

    செய்                                    –                   வயல்‌

    அனையார்                   –                   போன்றோர்‌

    சேய்மை                          –                   தொலைவு

     

  4. நாலடியார்‌ பாடல்களின்‌ எண்ணிக்கை – 400
  5. “நாலடி நானூறு’ என சிறப்புப்பெயர்‌ பெற்ற நூல்‌ – நாலடியார்‌
  6. சமண முனிவர்‌ பலர்‌ பாடிய பாடல்களின்‌ தொகுப்பு – நாலடியார்‌
  7. சங்க நூல்கள்‌ என்பது – எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
  8. “மேல்கணக்கு நூல்கள்‌ என அழைக்கப்படுவது – எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
  9. சங்க நூல்களுக்குப்‌ பின்‌ தோன்றிய நூல்களின்‌ தொகுப்பு – பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்‌
  10. “பதினெண்‌ என்ற சொல்லின்‌ பொருள்‌ – 18
  11. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்‌ பெரும்பாலானவை – அறநூல்கள்‌

பாரத தேசம்‌

  1. சாதி இரண்டொழிய வேறில்லையென்றே தமிழ்மகள்‌ சொல்லியசொல்‌ அமிழ்தமென்போம்‌” இதில்‌ “தமிழ்மகள்‌ என்பது யாரைக்‌ குறிக்கிறது? ஒளவையார்‌
  2. நீதி நெறியினின்றி பிறர்க்குதவும்‌ நேர்மையர்‌ மேலவர்‌; கீழவர்‌ மற்றோர்‌” – பாரதியார்‌
  3. ஆயுதம்‌ செய்வோம்‌ நல்ல காகிதம்‌ செய்வோம் ஆலைகள்‌ வைப்போம்‌ கல்விச்‌ சாலைகள்‌ வைப்போம்‌- பாரதியார்‌
  4. பொருள் கூறுக

வண்மை     –                   கொடை

கோணி          –                   சாக்கு

ஞாலம்           –                   உலகம்‌

       5.      வெள்ளிப்‌ பனிமலையின்‌ மீது உலாவுவோம்‌என்னும்‌ பாடலை பாடியவர்‌ – பாரதியார்‌

  1. பாரதியார்‌ பிறந்த ஆண்டு – 1882
  2. பாரதியார்‌ இறந்த ஆண்டு – 1921

 

பறவைகள்‌ பலவிதம்‌

 

1.  தமிழ்நாட்டில்‌ பட்டாசு வெடிக்காத ஊர்‌ – கூந்தன்குளம்‌ (திருநெல்வேலி)

2.  பறவைகள்‌ இடம்‌ விட்டு இடம்‌ செல்லுதல்‌ – வலசை போதல்‌

3.  மனிதர்களின்‌ நல்ல நண்பன்‌ – பறவைகள்‌

4.  நம்‌ நாட்டில்‌ எத்தனை வகை பறவைகள்‌ உள்ளது? 2400

5.  நிலத்திலும்‌ அடர்‌ உப்புத்தன்மை உள்ள நீரிலும்‌ வாழும்‌ பறவை – பூநாரை

6.  கடும்‌ வெப்பத்தை எதிர்கொள்ளும்‌ தன்மை உடைய பறவை – பூநாரை

7.  சமவெளி மரங்களில்‌ வாழும்‌ பறவைகள்‌ – மஞ்சள்‌ சிட்டு, செங்காகம்‌, சுடலைக்‌ குயில்‌, பனங்காடை, தூக்கணாங்குருவி

8.  நீர்‌ நிலையில்‌ வாழும்‌ பறவைகள்‌ – கொக்கு, தாழைக்கோழி, பவளக்காலி, ஆற்று உள்ளான்‌, முக்குளிப்பான்‌, நாரை, அரிவாள்‌ மூக்கன்‌, கரண்டிவாயன்‌, ஊசிவால்‌ வாத்து

9.  மலைகளில்‌ வாழும்‌ பறவை – இருவாச்சி, மின்சிட்டு, மரங்கொத்தி

10.  பறவைகளின்‌ புகலிடங்கள்‌

வேடந்தாங்கல்‌ பறவைகள்‌ புகலிடம்‌ எங்குள்ளது? காஞ்சிபுரம்‌

கரிக்கிரி பறவைகள்‌ புகலிடம்‌ எங்குள்ளது? காஞ்சிபுரம்‌

கஞ்சிரங்குளம்‌ பறவைகள்‌ புகலிடம்‌ எங்குள்ளது? இராமநாதபுரம்‌

மேல்செல்வனூர்‌ பறவைகள்‌ புகலிடம்‌ எங்குள்ளது? இராமநாதபுரம்‌

பழவேற்காடு பறவைகள்‌ புகலிடம்‌ எங்குள்ளது? திருவள்ளூர்‌

உதயமார்த்தாண்டம்‌ பறவைகள்‌ புகலிடம்‌ எங்குள்ளது? திருவாரூர்‌

வடுவூர்‌ பறவைகள்‌ புகலிடம்‌ எங்குள்ளது? தஞ்சாவூர்‌

கரைவெட்டி பறவைகள்‌ புகலிடம்‌ எங்குள்ளது? பெரம்பலூர்‌

வேட்டங்குடி பறவைகள்‌ புகலிடம்‌ எங்குள்ளது? சிவகங்கை

வெள்ளோடு பறவைகள்‌ புகலிடம்‌ எங்குள்ளது? ஈரோடு

கூந்தன்குளம்‌ பறவைகள்‌ புகலிடம்‌ எங்குள்ளது? திருநெல்வேலி

கோடியக்கரை பறவைகள்‌ புகலிடம்‌ எங்குள்ளது? நாகப்பட்டினம்‌

சித்தரங்குடி பறவைகள்‌ புகலிடம்‌ எங்குள்ளது? இராமநாதபுரம்‌

11.   பறவைகள்‌ எத்தனை வகையாகப்‌ பிரிக்கப்படுகிறது? 5 வகைகள்‌

 

 

பாம்புகள்‌

  1. உலகத்தில்‌ எத்தனை வகை பாம்புகள்‌ உள்ளன? 2750
  2. இந்தியாவில்‌ எத்தனை வகை பாம்புகள்‌ உள்ளன? 244
  3. நச்சுத்தன்மை கொண்ட பாம்புகளின்‌ எண்ணிக்கை – 52
  4. உலகில்‌ மனித இனம்‌ தோன்றுவதற்கு 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பே பாம்பு இனம்‌ தோன்றியது.
  5. உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு – இராஜநாகம்‌ (15 அடி நீளம்‌)
  6. கூடுக்கட்டி வாழும்‌ ஒரே வகைப்‌ பாம்பு – இராஜநாகம்‌
  7. மற்ற பாம்புகளைக்‌ கூட உணவாக்கிக்‌ கொள்ளும்‌ பாம்பு – இராஜநாகம்‌
  8. பாம்பு தன்‌ நாக்கை அடிக்கடி வெளியே நீட்டுவது ஏன்‌? சுற்றுபுறத்தின்‌ வாசனையை அறிந்து கொள்ள
  9. நல்ல பாம்பின்‌ நஞ்சிலிருந்து தயாரிக்கப்படும்‌ வலி நீக்கி – கோப்ராக்சின்
  10. வனவிலங்கு பாதுகாப்புச்‌ சட்டம்‌ – 1972
  11. உழவர்களின்‌ நண்பன்‌ – பாம்பு
  12. தமிழில்‌ சில எழுத்துகள்‌ தன்‌ எழுத்தோடு மட்டும்‌ சேர்ந்து வருவது – உடனிலை மெய்மயக்கம்‌ பக்கம்‌
  13. தன்‌ எழுத்துடன்‌ சேராது பிற எழுத்துகளுடன்‌ சேரும்‌ எழுத்துகள்‌ – வேற்று நிலை மெய்மயக்கம்‌ (சார்பு)
  14. தமிழ்நாட்டில்‌ உள்ள பறவைகள்‌ சரணாலயங்கள்‌ – 13

 

 

இயல்‌ – 03

 

நான்மணிக்கடிகை

  1. “மனைக்கு விளக்கம்‌ மடவார்‌; மடவார்‌ தனக்குத்‌ தகைசால்‌ புதல்வர்‌. இப்பாடலின்‌ ஆசிரியர்‌ – விளம்பிநாகனார்‌
  2. “காதல்‌ புதல்வர்க்குக்‌ கல்வியே; கல்விக்கும்‌ ஓதின்‌ புகழ்சால்‌ உணர்வு – நான்மணிக்கடிகை
  3. குடும்பத்தின்‌ விளக்காக நிற்பவள்‌ – பெண்‌
  4. பெண்ணுக்கு விளக்கினை போன்றவர்கள்‌ – சிறந்த பிள்ளைகள்‌
  5. பிள்ளைகளுக்கு விளக்கினை போன்றது – கல்வி
  6. கல்விக்கு விளக்காக விளங்குவது – நல்லெண்ணம்‌
  7. மடவார்‌ – பெண்கள்‌, தகைசால்‌ – பண்பில்‌ சிறந்த
  8. விளம்பிநாகனார்‌ இயற்பெயர்‌ – நாகனார்
  9. விளம்பிநாகனார்‌ என்னும்‌ பெயரில்‌ “விளம்பி’ என்பது – ஊர்ப்பெயர்‌
  10. ‘கடிகை’ என்பதன்‌ பொருள்‌- அணிகலன்‌
  11. நான்மணிக்கடிகை எத்தனை அறக்கருத்துகளை கூறுகிறது? 4
  12. நான்மணிக்கடிகையின்‌ ஆசிரியர்‌ – விளம்பிநாகனார்‌

 

ஆராரோ ஆரிரரோ

  1. “வாய்மொழி இலக்கியம்‌’ என அழைக்கப்படுவது – நாட்டுப்புறப்‌பாடல்‌
  2. சென்னை போன்ற பெருநகரங்களில்‌ பாடும்‌ பாட்டு- கானாப்பாடல்
  3. நாட்டுப்புறப்பாடல்களின்‌வகைகள் ‌- 7
  4. வேலைசெய்வோர்‌ பாடுவது – தொழில்பாரல்
  5. திருமணம்‌ (மற்றும்‌) பிற நிகழ்வுகளில்‌ பாடுவது – சடங்குப்‌ பாடல்‌
  6. சாமி கும்பிடுவோர்‌ பாடுவது – வழிபாட்டுப்பாடல்
  7. இறந்தோர்க்கு பாடுவது – ஒப்பாரிப்பாடல்‌ 
  8. ஏட்டில்‌ எழுதாத பாடல்கள்‌ – நாட்டுப்புறப்‌ பாடல்கள்‌

 

வீரச்சிறுவன்‌

  1. ‘வீரச்சிறுவன்‌’ சிறுகதையின்‌ ஆசிரியர்‌ – ஜானகிமணாளன்‌
  2. ‘அறிவை வளர்க்கும்‌ அற்புதக்‌ கதைகள்‌’- ஜானகிமணாளள்‌
  3. குதிரையை அடக்கிய வீரச்சிறுவன்‌ யார்‌? நரேந்திரதத்‌
  4. ‘நரேந்திரதத்‌’ என அழைக்கப்பட்டவர்‌ – சுவாமி விவேகானந்தர்‌ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button