வரலாறு என்றால் என்ன?

அறிமுகம்‌

  • வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின்‌ காலவரிசைப்‌ பதிவு.
  • வரலாறு என்ற சொல்‌ கிரேக்கச்‌ சொல்லான “இஸ்டோரியா” (ISTORIA) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன்‌ பொருள்‌ “விசாரிப்பதன்‌ மூலம்‌ கற்றல்‌” என்பதாகும்‌.

வரலாற்றின் ஆதாரங்கள்

  • மக்கள்‌ வாழ்ந்த காலம்‌, அக்கால நிகழ்வுகள்‌, உணவு முறை, பண்பாடு, பழக்கவழக்கம்‌, ஆட்சிமுறை, கலை, இலக்கியம்‌ போன்றவற்றை பற்றி அறிய உதவும்‌ எழுதப்பட்ட ஆவணங்கள்‌ மற்றும்‌ பழங்காலப்‌ பொருள்கள்‌ முதலியன வரலாற்று ஆதாரங்கள்‌ எனப்படும்‌.
  • வரலாறு என்பது வரலாற்றுக்கு முற்பட்ட காலம்‌, தொடக்க கால வரலாறு,வரலாற்றுக்‌ காலம்‌ என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
  • வரலாற்று காலம்‌ எழுதப்பட்ட சான்றுகள்‌ மற்றும்‌ பிற ஆதாரங்களுக்கான சான்றுகளைக்‌ கொண்டுள்ளது.
  • எழுதப்பட்ட சான்றுகள்‌ இலக்கியப்‌ படைப்புகள்‌, வரலாற்றுக்‌ குறிப்புகள்‌, கல்வெட்டுகள்‌, தாமிரத்‌ தகடுகள்‌ மற்றும்‌ பனை ஓலைகள்‌.

வரலாற்றுக்கு முந்தைய காலம்‌

  • கல்‌ கருவிகளின்‌ பயன்பாட்டிற்கும்‌ எழுத்து முறைகளின்‌ கண்டுபிடிப்புக்கும்‌ இடையிலான காலம்‌ வரலாற்றுக்கு முந்தைய காலம்‌ ஆகும்‌.
  • கல்‌ கருவிகள்‌, அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொருட்கள்‌ மற்றும்‌ பாறை ஓவியங்கள்‌ வரலாற்றுக்கு முந்தைய காலத்தின்‌ முக்கிய ஆதாரங்கள்‌ ஆகும்‌.

வரலாற்றுத்‌ தொடக்க கால

  • வரலாற்றுக்கும்‌, வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும்‌ இடைப்பட்ட காலம்‌ வரலாற்றுத்‌ தொடக்க காலம்‌ ஆகும்‌.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button